புதன், 1 மே, 2013

வடமாவட்டங்களில் பேருந்துகளை அடித்து கொழுத்தும் பா ம க குண்டர்கள்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
காடுவெட்டி குரு, ஜி.கே. மணி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து வடமாவட்டங்களில் வன்முறை பரவி வருகிறது. மூன்று பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்திருக்கிறது மேலும் பாமகவினரின்
தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன.
மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் பல இடங்களில் பா.ம.க.வினர் போட்டு தாக்குகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திப்பம் பட்டியில் நேற்று இரவு அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. நேற்று இரவு திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அரசு பஸ்சை வாலாஜா கொளத்தேரி மேம்பாலம் அருகே மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி தீ வைத்தனர்

வேலூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நள்ளிரவில் வந்து கொண்டிருந்த விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பஸ் ஒன்று தீவைக்கப்பட்டது.
சென்னை – திருப்பதி, அருங்குளம் – திருத்தணி செல்லும் அரசு பஸ்கள் இரண்டும் திருத்தணி அருகே உள்ள பட்டாபிராமபுரம் கிராமம் அருகே அடித்து உடைக்கப்பட்டன.
செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் ஆலம் பூண்டி அருகே 4 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. செஞ்சி – விழுப்புரம் சாலையில் 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. செஞ்சி பகுதியில் மட்டும் 12 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன.
பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்ட பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்
viruvirupu.com

கருத்துகள் இல்லை: