இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு அங்கே வரவேற்பு அதிகம்.
அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ஆம் அறிவு படம் ஆந்திராவிலும் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் சம்பந்தமாக ஐதராபாத்தில் நடந்த விழாவொன்றில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண்தேஜா பங்கேற்று பேசும் போது 7ஆம் அறிவு பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை வானளாவ புகழ்ந்தார். ஏ.ஆர். முருகதாஸ் திறமையான இயக்குனர். அவரைப் போல் சிறந்த இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்றார். (ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தின் ரீமேக் தான் சிரஞ்சீவி தெலுங்கில் நடித்த தாகூர். தொடர்ந்து ‘ஸ்டாலின்’ படத்தை சிரஞ்சீவி நடிப்பில் இயக்கினார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது)
ராம்சரண் பேச்சு தெலுங்கு முன்னணி நடிகர் பால கிருஷ்ணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராம்சரனை அவர் கண்டித்தார். சினிமா சரித்திரம் தெரியாமல் பேசக் கூடாது. தெலுங்கு பட உலகிலும் முருகதாசுக்கு இணையாக திறமையான இயக்குனர்கள் உள்ளனர். இனிமேலும் இது போல் தெலுங்கு டைரக்டர்களை இழிவு படுத்துவது போல் பேசினால் பல்லை உடைப்பேன் என்றார்.
சிரஞ்சீவியும் பால கிருஷ்ணாவும் சமகாலத்து கதாநாயகர்கள். இருவரும் முன்னணி நடிகராக இருந்த போது அவர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது உண்டு. தற்போதும் அப்பனிப்போர் நீடிப்பதாலேயே சிரஞ்சீவி மகனை பாலகிருஷ்ணா கண்டித்து உள்ளதாக தெலுங்கு திரையுலகம் கிசு கிசுக்கிறது.
இது குறித்து சிரஞ்சீவியிடம் கேட்ட போது ராம்சரண் பேசின முழு விவரம் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் தெலுங்கிலும் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக