வியாழன், 3 நவம்பர், 2011

நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர் வழக்கு: ஐகோர்ட் ஏற்பு


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: ஐகோர்ட் ஏற்பு
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சி காலத்தின் போது சென்னை கொரட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மைய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. நூலக பயன்பாட்டிற்காக இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றுவது என்றும் அந்த நூலக கட்டிடத்தை குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுத்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பானது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அமைச்சரவை தவறான முடிவு எடுக்கும் போது நீதிமன்றம் தலையிட அதிகாரம் உள்ளது. கடந்த ஆட்சியில் இந்த நூலகம் கட்டப்பட்டதற்காக தற்போதைய அரசு இதனை மாற்றம் செய்வது தவறு. அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தை மருத்துவ மனையாக மாற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்.

இந்த நூலகம் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க கமிட்டி அமைத்திட உத்தர விட வேண்டும். அமைச்சரவை முடிவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Nakkeran: புதிய தலைமை செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்த பொது, அரசின் முடிவில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை என்று சொல்லியது போல, இதிலும் நீதி மன்றம் அப்படி ஒரு தீர்ப்பு கூறாமல் இருந்தால் சரி.

இந்த பொம்பள திருந்தவே மாட்டாள் ! எதுக்காக தேர்ந்து எடுத்தோம் அத பார்காம ! வெட்டிதனமா செய்துட்டு இருக்கு !
கணம் கோட்டார் அவர்களே நீங்கள் இன்னும் தூங்கினால் நீதிமன்றத்தை டாஸ்மாக் கோடான் ஆக மாற்றி விடுவார்கள்.

கருத்துகள் இல்லை: