சனி, 5 நவம்பர், 2011

கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்தனர்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு
ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்தனர்
- மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர். தங்களது ஐரோப்பிய விஜயத்தின் போதும் இதனையே செய்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை நேற்று வெள்ளிக்கிழமை (4.11.2011) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்துரையாற்றிய போது; தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாமை என குறிப்பிட்ட பிரதியமைச்சர் முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பனர்கள் மட்ட்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.இவர்களில் ஒருவரையாவது இவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதா? பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அண்ணன் தாரளமாக ஆங்கிலம் பேசுவார். அவரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால் கிழக்கு என்ற ஒரு காரணத்திற்காக மட்டக்களப்பை இவர்கள் புறக்கணித்துள்ளனர்.

கிழக்கை இவர்கள் புறக்கணிப்பது இன்று மட்டுமல்ல தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையாகும்.

இராஜதுரையை புறக்கணித்தார்கள், விடுதலைப்புலிகள் நான் கிழக்கு என்பதற்காக என்னை புறக்கணித்தார்கள்.

இவ்வாறு, காலா காலம் இவர்களின் கிழக்கு புறக்கணிப்பு இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு இவர்களினால் புறக்கணிக்கப்பட்டுள் ளோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கையின் மிகப்பெரிய இரண்டாவது குடி நீர் விநியோகத்திட்டம் ஜனாதிபதியினால் அண்மையில் வவுணதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்களின் நன்மைக்காகவே நான் செயற்பட்டேன். கிழக்கு மாகாணத்தில் இன்று ஜனாதிபதியினால் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்கம் பெருந்தொகையான பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதில் சமுர்த்தி திட்டத்திற்கு 125 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கீட செய்யப்பட்டுள்ளது.

இதில் 100 மில்லியன் வாழ்வா தாரத்திற்கும், 25 மில்லியன் டமைப் புக்குமாகும்.

இன்று ஏனைய மாவட்டங்களை விட மட்டக்களப்பு மாவட்டம் அழகாக காட்சி தருகின்றது. மட்டக்களப்பு நகரின் பிரதான வீதிகளை பாருங்கள் வீதியின் நடுவே அழகான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றா

கருத்துகள் இல்லை: