செவ்வாய், 1 நவம்பர், 2011

கனிமொழி விவகாரம், சி.பி.ஐ.யை துரத்தி துரத்தி அடிக்கிறது!

Viruvirupu
கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, ஆட்சேபணை தெரிவிக்காமல் இருந்த விவகாரம், சி.பி.ஐ.க்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. அதே வழக்கில் கைதாகிய மற்றையவர்களின் ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. இன்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கப் போக, “நீங்கள் இரட்டை நிலைப்பாடு எடுக்கிறீர்களா?” என்று நீதிபதியிடம் இருந்து டோஸ் விழுந்திருக்கிறது.
“கனிமொழிக்கும் அவருடன் சேர்ந்தவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால், மற்றையவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை எதிர்க்கிறீர்கள். இதை கொஞ்சம் விளக்குங்கள் பார்க்கலாம்” என்று நீதிபதி கூறியபோது, சி.பி.ஐ.-யால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை. எப்படிக் கொடுக்க முடியும்?

சில அரசியல் காரணங்களுக்காக (அல்லது, கருணாநிதி டில்லிக்கு விசிட் அடித்து, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்ட காரணத்துக்காக) கனிமொழி ஜாமீன் கோரிக்கையை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை என்றே பரவலாக நம்பப்படுகின்றது.
நேற்று விறுவிறுப்பு.காமில், “சுப்ரீம் கோர்ட்டில் இன்று இப்படியொரு கேள்வி எழுந்தால், சி.பி.ஐ. என்ன செய்யும்?” என்று நேற்று எழுதியிருந்தோம். "சி.பி.ஐ. நாளை மீண்டும் சொரூபத்தைக் காட்டும் “சாரி.. நோ ஜாமீன்!”">“சி.பி.ஐ. நாளை மீண்டும் சொரூபத்தைக் காட்டும் சாரி.. நோ ஜாமீன்!” என்ற தலைப்பில் வெளியான அந்தச் செய்தியில், “மற்றையவர்களின் ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. எதிர்க்கப் போவதாகத் தெரியவருகின்றது. அப்போது கனிமொழி ஜாமீன் மனுவில் இவர்கள் எடுத்த நிலை பற்றி கேள்வி எழுமே” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
நாம் சொன்னதுபோலவே இன்று இவர்களும் எதிர்த்திருக்கிறார்கள். கேள்வியும் எழுந்திருக்கிறது.
இன்று சுப்ரீம் கோர்ட்டில், “கனிமொழி விஷயத்தில், அவரால் இனி சாட்சிகளை கலைக்க முடியாது. அவரிடம் செய்ய வேண்டிய விசாரணையும் முடிந்து விட்டது” என்ற பதில் சி.பி.ஐ. தரப்பில் இருந்து கூறப்பட்டது. உடனே, அதற்கு எதிர்க் கேள்வி போட்டார் நீதிபதி. “அப்படியானால் எதற்காக அவரை இன்னமும் சிறையில் வைத்திருக்கிறீர்கள்?”
சி.பி.ஐ.யின் டபுள்-ஸ்டான்ட் எப்போது அடிவாங்கும் தெரியுமா?  சி.பி.ஐ. எதிர்க்கும் ஒரு ஜாமீன் மனுவுக்கு, கனிமொழியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜாமீன் கொடுக்கும்போது!

கருத்துகள் இல்லை: