புதன், 2 நவம்பர், 2011

ஜெயலலிதாவால் மூடப்படும் இரண்டாவது கலைஞர் கட்டிடம்


New Secretariat Building and Anna Centenary Library
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் பார்த்துப் பார்த்துக் கட்டடம் ஒன்றை வேறு உபயோகத்திற்காக முதல்வர் ஜெயலலிதா மாற்றுவது இது 2வது முறையாகும்.
கடந்த திமுகஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் எழுப்பப்பட்ட பிரமாண்ட கட்டடங்களில் புதிய தலைமைச் செயலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் முக்கியமானவையாகும்.
இப்போது இந்த இரண்டையுமே வேறு உபயோகத்திற்காக தற்போதைய அரசு பயன்படுத்தப் போகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலகத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து அந்த புதிய கட்டடத்தில், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு நிகரானதாக இந்த மருத்துவமனை இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். ரூ. 1092 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கட்டடம், புதிய தலைமைச் செயலகம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலக கட்டடத்த அப்படியே கிடப்பில் போடாமல் மருத்துவமனை அமைக்கப் போவதாக சொல்லியிருப்பதுகுறித்து மகிழ்ச்சிதான் என்றார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியால் பார்த்துப் பார்த்துக்கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படவுள்ளது. இதையும் மருத்துவமனையாக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது சிறார்களுக்கான உயர் மருத்துவமனையாக மாறவுள்ளது

கருத்துகள் இல்லை: