ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Ramadas:ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை

திண்டிவனம் நகரில் தீர்த்த குளம், முருங்கப்பாக்கம், ரோஷணை, கரிய கவுண்டர் வீதி, அவரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பா.ம.க., வேட்பாளர் சங்கரை ஆதரித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது : நான் திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி வர ரோடில் இறங்கி போராடியுள்ளேன். மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த போது, அரசு மருத்துவமனைக்கு செய்த நன்மைகள் ஏராளம். நிச்சயம் கருணாநிதி தான் முதல்வராக வருவார்.அவர் மூலம் திண்டிவனத்திற்கு நீங்கள் விரும்புகின்றவற்றை செய்து தருவேன். சங்கர் நல்ல வேட்பாளர். இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஜெ., மாணவர்களை ஆடு, மாடு மேய்க்க போகுமாறு கூறுகிறார். கருணாநிதி மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுத்து, படிக்க கூறுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெ., மக்களுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர். அப்படிபட்ட அ.தி.மு.க.,விற்கு எப்படி ஓட்டு போட முடியும்? கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெ., காப்பியடித்துள்ளார். கருணாநிதி மக்கள் உண்ண, உடுக்க, உறங்க வழி செய்துள்ளார். வேட்பாளர் சங்கர் கடுமையாக உழைப்பவர். நானே எம்.எல்.ஏ.,வாக இருந்து அவரை இயக்குவேன். தி.மு.க., தலைமையிலான கூட்டணி சமய, சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

கருத்துகள் இல்லை: