செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்.நாஞ்சில் சம்பத்

தென்காசி: நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


தென்காசியில் மதிமுக சார்பில் நேற்றிரவு இன்றைய சூழலில் தமிழ் சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா, அல்லது அடங்கியிருக்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

நடுவராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என பாராட்டப்பட்டவர் வைகோ. ஒரு ஆலை உரிமையாளரிடம் ரூ.1000 கோடி பெற்றுக் கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.

எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென்மாவட்டங்களில் அதி்முகவை தூக்கி நிறுத்தியவருமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், சாத்தூர் ராமசந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாமரை கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா.

இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரனுக்கே அங்கு இடமில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார். ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள்.

வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக் கூடாது. கனி இருக்க காயை விரும்பக் கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

கருத்துகள் இல்லை: