வெள்ளி, 17 மே, 2024

மம்தா பானர்ஜி : இந்தியா கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன்

 மாலை மலர் : பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார்.
இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஏறக்குறைய மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்த்துக் கொண்டது.

தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிகள் முடிவடைந்து விட்டனர். இந்தியா கூட்டணி தங்களுக்குதான் வாய்ப்பு என கூறி வருகிறது. அதேவேளையில் 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்பது உறுதி என மோடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:-

மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும். இந்தியா கூட்டணி பெங்கால் காங்கிரசை கணக்கில் கொள்ளாது என்கிறார். இந்தியா கூட்டணி பற்றி அவர் புகார் கூற இருந்தால், அது உருவானபோது எழுப்பியிருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளை தாண்டாவது எனவும் பா.ஜனதா கூறியது. தற்போது மம்தா சொல்வதின் அர்த்தம் காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதுதான்.

கருத்துகள் இல்லை: