ஞாயிறு, 24 டிசம்பர், 2023

திமுக சுயபரிசோதனை செய்ய தவறினால்.. கொந்தளிக்கும் உடன்பிறப்புக்கள்

May be an illustration of 1 person

Vimalaadhithan Mani :   இறையன்பு தலைமை செயலாளராக, அறிவார்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக, பேராசிரியர் ஜெயரஞ்சன் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதெல்லாம் நாம் அனைவரும் திமுக அரசுக்கு தாராளமாக சில்லறையை சிதறவிட்டோம்.
ஆனால் நடந்தது என்ன?
ஒன்றியத்தின் முட்டாள்தனமான கொள்கை முடிவுகளை, ஜக்கியை தரவுகளுடன் தைரியமாக, கடுமையாக எதிர்த்த PTR வேறு டம்மியான ஒரு துறைக்கு தூக்கியடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அமைதியாக்கப்பட்டார்.   முற்போக்கு இயக்கங்கள் தெருமுனை கூட்ட அனுமதி பெறுவதே குதிரைக்கொம்பாக இருக்கையில், ஆர்எஸ்எஸ் ஊட்டியில் எவ்வித இடையூறும் இன்றி பகிரங்கமாக ரகசியக்கூட்டம் நடத்துகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை என்ன?


கொடநாடு வழக்கின் முன்னேற்றம் என்ன ?
வேங்கைவயலும், நாங்குநேரியும் அந்தந்த வாரங்களின் சமூகவலைத்தள பேசுபொருளாக மட்டும் இருந்து கடந்து போய்விட்டன.
அத்தனை ஊடங்கங்களும் காறித்துப்பிய டாஸ்மாக் பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்படும் பத்து ரூபாயை இன்று வரை அரசு நிறுத்தியதாக தெரியவில்லை.
ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக நீட்டை ஒழிப்போம் என்று உறுதி கொடுத்தனர். ஆனால் நீட்டால் நடக்கும் உயிர்பலிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் திமுக அரசு தன்னை கடுமையாக சுயபரிசோதனை செய்ய தவறினால், இது தான் திராவிட கட்சிகளின் கடைசி ஆட்சியாக இருக்க போகிறது .
இது உறுதி!

Vimalaadhithan Mani  :  ஏன் PTR தியாகராஜனை நோக்கிப் பாய்கிறார்கள்  ?
All roads lead to Rome புகழ் பெற்ற ஆங்கில பழமொழி இதில் ஒரு சின்ன திருத்தம் எல்லோர் பார்வையும் (வலது சாரிகள் மற்றும் அ.தி.மு.க வினர்  )  பழனிவேல் தியாகராஜன் மீது பாய்கிறது.காரணம் இளம் வயதில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டார்.நினைத்துப் பார்க்க முடியாத படிப்பு. அறிவு. இது ஒரு வகையான பொறாமையின் வெளிப்பாடு என்று தான் சொல்ல வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த காரணமாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உள்ளுக்குள் இன்னொரு காரணம் இருப்பதாகவே தோனன்றுகிறது.
பி.டி. ராஜன் ,பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் , பழனிவேல் தியாகராஜன். இந்தப் பெயர்களைக் கேட்டாலே,  கடந்த நூறு ஆண்டுகளாக வலதுசாரிகளுக்கு காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது.தொண்டையில் முள் சிக்கியது போன்று இருக்கிறது.முமுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை.இது தான் உண்மை. பொதுவாக வலது சாரிகளுக்கு பிடிக்காத ஒருவரை ஊழல் குற்றச்சாட்டு, மூலமாக அவமானப் படுத்தி ஒதுக்கி விட முயற்சிப்பார்கள்.ஆனால் மேலே கூறிய மூவரும் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிடத்தின் பக்கம் நின்று வலதுசாரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்து அவர்கள் கண்ணின் விரல் விட்டு ஆட்டுகின்றனர்.
கொஞ்சம் பின் நோக்கி போவோம்.தமிழ் நாடு மாநிலம் பிரிப்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த தென்னிந்தியாவை மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. இதை நீதி கட்சி ஆண்டது.நீதி கட்சி தான் திராவிட இயக்கத்திற்கு தாய்வீடு.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்னிந்தியாவை நீதி கட்சி ஆட்சி புரிந்தது.அப்பொழுது ஆட்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன். பிறகு எனனவோ மற்றவர்களுக்கு வழி விட்டு இவர் ஒதுங்கி விட்டார்.அதே நேரம் நீதி கட்சியில் தொடர்ந்து இருந்தார்.ஆன் மீகத்தில் நாட்டம் உடையவர். ஒரு முறை சபரிமலை ஜய்யப்பன் கோவில் எரிந்து விழுந்த போது.அந்த கோவிலுக்கு மூலவிக்கரம் செய்து கொடுத்த பெருமை இவருக்கு உண்டு, .பி.டி.ராஜன் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்நவர்.
அவரது மகன் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை மதுரை  ராமலிங்க வள்ளலார் என்று அழைத்தனர்.காரணம் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் 24, மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டு இருக்கும். காலை, மதியம், மாலை, இரவு இந்த நேரங்களில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் அவர் வீட்டில் சென்று சாப்பிடலாம் அவ்வளவு தர்ம சிந்தனையார். யாரும் எளிதில் நெருங்கி பழகலாம்.மதுரை மாநகர வளர்ச்சிக்கு அவ்வளவு பாடுபட்டார். ஒரெ வழியில் சொன்னால் மக்கள் தொண்டர். இவரிடம் உதவி பெறாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அதனால் தான் பி.டி.ஆர் .பழனிவேல் ராஜனில் இறுதிச் சடங்கின் போது மதுரையில் ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் கண்ணீரோடு கூடி விட்டனர்.
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் எம்.ஜி.ஆருக்கு சிம்ம சொப்பனம்.
எம் ஜி.யார். உயிரோடு இருக்கும் வரை அவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இவரிடம் எம்.ஜி.ஆர்.மோதினார் வழக்கறிஞரான பழனிவேல் ராஜன் மதுரை பல்கலை கழகம் சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார்.முதல்வர் எம்.ஜிஆர்.அவர் தகுதிக்கு இதை கண்டு கொள்ளாமல் போய் இருக்கலாம்.பி.டி.ஆரை தோற்கடிக்க எத்தனையோ முயற்சி செய்தார். பலன் அளிக்க வில்லை.பிடி.ஆர் பழனிவேல்ராஜன் சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றார்.பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மதுரை தி.மு.க.வின் முக்கிய தலைவராக இருந்தார்.வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தி.மு.க வினராகவே இருந்தார்.சிறந்த சபாநாயகர் என்று பெயர் பெற்றார்.அடுத்த முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது கலைஞர் பி.டிஆரை அழைத்து எந்த துறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற போது இவர்தேர்வு செய்தது அறநிலைத் துறை.மற்றவர்களெல்லாம் கல்வி அல்லது சட்டத்துறை அமைச்சராகுங்கள் என்ற போது மறுத்து விட்டு அறநிலைத்துறையை ஏற்றுக் கொண்டார். காரணம் மீனாட்சி அம்மன் மீது அவ்வளவு பக்தி. சிறந்த டென்னிஸ் பிளேயரான இவர் ரயில் பயணத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது தான் வேதனை.பி.டி.ஆருக்கு ஒரே பையன் தியாகராஜன். கலைஞர் அவரை கூப்பிட்டு அறநிலைத்துறை அமைச்சர் பொறும்பை ஏற்றுக் கொள் என்ற போது மறுத்து விட்டார். காரணம் மனைவி மகப்பேறு அடைந்திருந்தார்.
ஒரே பிள்ளை பெற்றோர்களிடம் சேர்ந்து இருந்தது 6 வருடங்கள் மட்டுமே.காரணம் கான்வென்ட் படிப்பு.திருச்சி மண்டப் பொறியியல் கல்லூரியில் பி.டெக் கெமிக்கல் இஞ்ஜினிரிங்கல் அமெரிக்காவில் மேற்படிப்பு எம்.எஸ்.ஆராய்ச்சி படிப்பில் P.hd. பின்னர் சென்னை M.I.T யில் M.B.A .20 வருடங்கள் அமெரிக்கா 5 வருடம் சிங்கப்பூரில் உவகப்  புகழ் பெற்ற வங்கியில் முக்கியப் பொறுப்பு. இந்த 25 வருட பணியில் வருடத்திற்கு ஒரு வாரம் தான் விடுமுறை கோடிக் கணக்கில் சம்பளம்.வெளிநாட்டைப் பெண்ணை மணந்தாலும் மதம் மாறாமல் தத்ததையைப் போல் நெற்றி அழங்கரிக்கும் பெரிய குங்குமப் பொட்டு.இரண்டு பையன்களுக்கு தாத்தா மற்றும் அப்பாவின் பெயர்.
தேனி. கம்பம். சின்னமனூர் பக்கம் சென்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் இவருடைய வயல் வரப்புகள். இப்படி பட்டவர் தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார்.
அ.தி.மு.க.ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது தியாகராஜன் அற்புதமான ஆங்கில உரையை ரசித்துக் கேட்டு பதில் சொல்லி இருக்கிறார்.25. வருடங்களுக்கு மேல் ஆங்கிலத்திலேயே பேசி விட்டு சரனமாக தமிழ் பேசுவதில் தடுமாறுகிறார் அவ்வளவு தான்.தமிழ்நாட்டைச் சேர்ந்த வலது சாரிகள் அவர்கள் மீது ஏற்பட்ட பரபரப்பை திசை திருப்ப இவர் விசயத்தை எடுத்தோக் கொள்கிறார்கள்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி.கூட்டத்திற்கு இவர் ஏன் போக வில்லை என்கிறார்.தியாகராஜன் போல் பொருளாதார மேதையா இவர்? அதிகாரி கொடுத்ததை படித்து விட்டு வருவார்.தியாகைராஜன் ஜிஎஸ்.டி மீட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்றால் பலருக்கும் நடுக்கம் வந்து விடும்
தியாகராஜன் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில் ஒருவர் உங்களௌ கொழுந்தியா வளைகாப்பா என்கிறார். என்ன கொழுப்பு.சென்ற முறை ஜி.எஸ்.டி.கூட்டத்தில் கலந்து கொண்டார் தமிழ் நாட்டிற்கு வர வேண்டியை ஏறக்குறையை 8 ஆயிரம் கோடி எங்களுக்கு வரவேண்டும் கொடுங்கள் என்றார். இன்னும்  வந்து சேரவில்லை.தமிழக சார்பில் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. அதிகாரிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.ஒருவீடியோ ஒரு ஆடியோ மறைக்க இவ்வளவு கூத்து.டி.வி விவாத மேடையில் ஒரு மருத்துவர் பொருளாதாரத்தைப் பற்றி பேசினார். உங்களுக்கு பொருளாதாரத்தைப் பற்றி என்ன தெரியும் என்றார் இதில் என்ன குற்றம்.காட்டை அழித்து நூறௌறுக்கும் மேற்பட்ட ஏக்கரை தனியால்ர் வளைத்துக் கொண்டார். இயற்கை வளத்தை சுரண்டக் கூடாது என்றார் அதில் என்ன தவறு.
தி.மு.க.வில் நன்கு படித்த இளைஞர்கள் வந்து விட்டார்கள்.அதில் முதலாமவர் தியாகராஜன் அவரை டார்க் பண்ணி தி.மு.கவைவீக் பண்ண வேண்டும் இது தான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.தமி ழக. முதல்வருக்கு இது நன்கு தெரியும்.ஆட்சிக்கு வந்து நான்கு மாசத்திலே இவ்வளவு விமர்சனம்.தமிழ் நாட்டில் உள்ள அ.தி.மு.க. தலைவர்கள் குறிப்பாக ராஜேந்திரபாலாஜி. மற்றும் பி.ஜே.பி.தலைவர்கள் குறிப்பாக H.ராஜா பேசாத பேச்சையா இவர் பேசி விட்டார் உவக கெவி வெயிட் பாகேஸிங் சேம்பியனுடன் மோத வேண்டு மென்றால் குறைந்த பட்சம் கோம்ஸ் ஆவது வேண்டும்.கருப்புசாமி குப்புசாமிகளோடு அவர் மோத மாட்டார்.நான் இங்கு டைசள் என்று குறிப்பிடுவது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை.அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும். இங்கு அது யாருக்கும் இல்லை என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
மாண்புமிகு.தமிழ்நாடு. நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜனுக்கு ஒருவர் எதிர்க்கிறார் என்றால் நீங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஊரே எதிர்க்கிறது என்றால் நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.இங்கு ஊர் எள்பது வலது சாரிகளை குறிக.க்கும்.

 
Vimalaadhithan Mani    :  PTR பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வரும் முன், தான் வேலை செய்த நிறுவனங்களை திவால் ஆக்கியவர் என்று ஒரு பொய் கதையை படிப்பறிவற்ற மூளை கெட்ட தற்குறி சங்கி கும்பல் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது . முட்டா களவாணி பயலுகளா !!! படிக்காத வடக்கத்திய முட்டாள்களும், தென்னிந்தியாவில் இருக்கும் படித்த சங்கி முட்டாள்களும் வேண்டுமென்றால் உங்களுடைய இந்த பொய்  கதையை நம்புவார்கள் . உங்களுடைய PTR பற்றிய இந்த பொய்  கதைக்கு ஆதாரங்களுடன் என்னுடைய பதில்கள் இங்கே:
1. PTR ஒன்றும் திவாலான Lehman Brothers நிறுவனத்தின் நஷ்டத்துக்கு நேரடி காரணமாக இருந்த அந்த நிறுவனத்தின் சேர்மனாகவோ, CEO ஆகவோ, பார்ட்னர் ஆகவோ  வேலை செய்யவில்லை. திவாலான Lehman Brothers என்ற அமெரிக்க நிறுவனத்தில் Capital Markets என்ற மூலதன சந்தைகளை நிர்வகிக்கும் பிரிவில் ஒரு உட்பிரிவுக்கு தலைவராக இருந்தார் PTR. அவ்வளவே. இது படிப்பறிவற்ற எந்த சங்கி முட்டாளும் அறியாத உண்மை. மூலதனச் சந்தைகள் என்பது வங்கியின் பங்குகள், பத்திரங்கள், நாணயங்கள் மற்றும் பிற நிதிச் சொத்துக்களை வர்த்தகம் செய்வதற்கு வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்றிணைக்கும் நிதிச் சந்தைகள் ஆகும். இந்த Lehman Brothers நிறுவனம் திவாலாக முக்கிய காரணம் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் (Partners)  வெளியாட்களுக்கு கொடுத்த கணக்கு வழக்கில்லாத திருப்பி வசூலிக்க முடியாத வாரா கடன்களே (NPAs - Non Performing Assets). PTR வேலை செய்த Lehman Brothers நிறுவனத்தின் Capital Markets என்ற மூலதன சந்தை பிரிவுக்கும், வெளியாட்களுக்கு கடன்கள் கொடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வங்கியில் பணிபுரியும் MBA படித்தவன் என்ற முறையில் நான் அறிவேன். மற்ற படித்தவர்களும் அறிந்து கொள்வார்கள். படிப்பறிவற்ற, படித்தும் மூளை கெட்ட தற்குறி சங்கி கும்பலுக்கு இந்த அறிவு என்பது இருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆலமரம் போன்ற Lehman Brothers நிறுவனத்தில் ஒரு உட்பிரிவின் தலைவராக பணியாற்றிய PTR தான் அந்த நிறுவனம் திவாலாக காரணம் என்று ஆதாரமே இல்லாத ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். இந்த Lehman Brothers நிதி நிறுவனம் திவாலாக உண்மையான காரணங்கள் பற்றி முழுவதுமாக அறிய விரும்புவோர் தயவு செய்து பின்கண்ட புத்தகங்களை படியுங்கள். உண்மை விளங்கும். படிக்காமல் இப்படி டுபாக்கூர் வேலை செய்யாதீங்கடா சங்கி மூடர்களே !!!
1) A COLOSAL FAILURE OF COMMON SENSE, The Inside Story of the Collapse of LEHMAN BROTHERS - By Lawrence G. McDonald, Patrick Robinson
2) Street freak money and madness at Lehman Brothers a memoir - By Jared Dillian
3) The Devil's Casino, Friendship, Betrayal and the High -Stakes, Gamed Played Inside Lehman Brothers - By Vicky Ward
4) The Last of the Imperious Rich Lehman Brothers, 1844-2008  - By Peter Chapman
5) Uncontrolled Risk Lessons of Lehman Brothers - By Mark T Williams
6) Fall of Lehman Brothers - From the New York Times Archives
2. PTR சிங்கப்பூரில் வேலை செய்த மற்றொரு உலகப்புகழ் பெற்ற நிதி நிறுவனமான Standard Chartered Bank நிறுவனம் இன்னும் பிரமாதமாக லாபத்துடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது . சங்கிகள் புளுகுவது போல் இந்த வங்கி ஒன்னும் திவாலாகவில்லை. இந்த  Standard Chartered Bank நிறுவனத்தின் சென்னை கிளையில் VICE PRESIDENT ஆக பணியாற்றிய ஒருவன் என்ற முறையில் இந்த நிறுவனத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்தவன் நான். அதனால் இந்த வங்கியையும் PTR திவாலாகிவிட்டார் என்ற பொய்யை  சொன்னால் கைசூப்பும் சிறு குழந்தைகளும், படிக்காத வடக்கத்திய சங்கி முட்டாள்களும், தென்னிந்தியாவில் இருக்கும் படித்த சங்கி முட்டாள்களும்  வேண்டுமானால் நம்பலாம் . படித்தவர்களிடம் போய் இந்த கதையை சொன்னால் வாயால் சிரிக்காமல் வேறு எதிலாவதுதான் சிரிப்பார்கள் .
அதனால் படிக்காத , படித்த சங்கி தற்குறிகளே . உங்க பொய் பருப்பை கொண்டுபோய் படிக்காத வடக்கத்திய சங்கி முட்டாள்களிடமும், தென்னிந்தியாவில் இருக்கும் படித்த சங்கி முட்டாள்களிடமும் வேக வையுங்கள். எங்களை போன்ற படித்த, உலக நடப்பு முழுவதும் நன்கு அறிந்த ஆட்களிடம் உங்க பொய் , பித்தலாட்ட பருப்பை வேக வைக்க கொண்டு வர வேண்டாம் மூளையில்லாத மடையர்களே !!!

கருத்துகள் இல்லை: