வெள்ளி, 2 ஜூலை, 2021

ஜாக்கியை மீண்டும் போட்டு தாக்கிய பி டி ஆர் .. மண்புழு ஒரு இந்து ...

latest tamil news

dinamalar.com கோவை: ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, 'மண்புழு ஓர் ஹிந்து' என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்.

கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், 'ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து' என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், 'ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).

இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, 'சார்லடன்' என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்' என, குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன்.

தியாகராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், சத்குருவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திடீரென சில வாரங்கள் அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். தற்போது மீண்டும், பழைய, அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய டுவிட்டை தோண்டி எடுத்து, விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவாவை விமர்சித்தது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கும், டுவிட்டரில், 'வார்த்தைப்போர்' வெடித்தது. அப்போது, 'பிறவிப் பொய்யர்' என வானதியை விமர்சித்தார். தற்போது சத்குருவை, 'பன்முக பகட்டுக்காரர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: