திங்கள், 28 ஜூன், 2021

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், உப்பாற்று ஓடைப்பகுதியில் ரசாயன காப்பர் லாக் கழிவுகளை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (28/06/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்ததோடு, "ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா? ஓடையில் காப்பர் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார்? 2018-ல் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை?" எனக் கேட்டு, 12 வாரங்களில் பொதுப்பணித்துறைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை: