வியாழன், 2 டிசம்பர், 2021

அண்ணன் கோ சி மணி..தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்..

May be an image of 2 people and people standing

ஆலஞ்சியார்  :  அண்ணன் மணி..
தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்.. தஞ்சை பகுதியில்
பண்ணையார்களும் நிலக்கிழார்களும் (மிராசுதார்கள்) காங்கிரஸை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் தஞ்சையை திமுகவின் பக்கம் கொண்டுவர அரும்பாடுபட்டவர்.. ஓய்வில்லாத உழைப்பிற்கு சொந்தக்காரர்.. ஒவ்வொரு கிளைக்கழகத்தை சேர்ந்தவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையோடு கடிந்துக்கொள்ளும்.. அதே போல் அவர்களையும் உரிமையோடு பேச சொல்லி ரசிக்கும் திமுகவின் மாபெரும் தலைவர்..
ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து கொடி ஏற்றுவதாக ஒத்துக்கொண்டார்.. நேரமாகிக்கொண்டே போகிறது மக்கள் சலசலக்க தொடங்கிவிட்டனர்.. அமுல்ராஜ்தான் கிளைக்கழக செயலர்.. கோபமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே  ஜீப்பில் வந்திறங்கி அமுல் கோச்சிக்காதடா வரவழியில வண்டி பஞ்சர் அதான் லேட்டாயிடுச்சு என்றவுடன் தொண்டை கிழிய கத்துகிறார் அமுல்ராஜ்.. மாவீரன் கோ.சி.மணி வாழ்க..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. கோபத்தை மறந்து உணர்ச்சி மேலிட வானம் அதிர்கிறது கரவோசத்தால்.. எந்த வித கோவமும் கொள்ளாமல் அமுல்ராஜை அணைத்துக்கொண்டே பேசுகிறார்.. கட்சியின் அடிமட்ட தொண்டனையும் அறிந்து வைத்திருந்த மாவட்ட செயலாளர் அதனால் தான் கடைசிவரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது..

கலைஞரின் அசைவு தெரிந்து படை திரட்டும் தஞ்சை தளபதி.. கும்பகோணத்தை ஜொலிக்க செய்த வைரம்.. சில துரோகிகள் கட்சியை சொந்த கொண்டாட சில மாவட்ட செயலர்களோடு வெளியேறிய போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி கலைஞரின் பின்னால் கழகம் என உரைக்க சொல்லியவர்..  இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படவேண்டும்  என்பதற்கு இவர் அகராதி..Dictionary..
..
திரு.வைகோ திமுகவிலிருந்து நீக்கபட்டபோது திமுகவிற்கு உரிமைகோரினார்.. கலைஞர் பொதுக்குழுவை கூட்ட பாதுகாப்பான இடம் தேவையென பேராசிரியர் சொன்னபோது தஞ்சையில் கூட்டலாம் என்றார் கலைஞர் .. தஞ்சையில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் பொதுக்குழு செயற்குழு நடைபெற்றது .. அன்று மாலை பொதுகூட்டம் .. எப்படி நடக்கிறது பார்க்கலாமென சில விஷமிகள் .. செய்தி கலைஞர் காதுக்கு வருகிறது.. என்னய்யா உன்னை நம்பிதானே வந்தேன் இப்படி கலவரம் வரும் போலயிருக்கே என்ற போது .. இரு வரேன் என சொல்லிவிட்டு வெளியில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வண்டிய எடுறா. . என விரைந்து பொதுக்கூட்டம் நடக்கும் மானம்புசாவடிக்கு வந்தார் ..வேட்டியை மடிச்சுகட்டிக்கிட்டு யாருடா கலாட்டா பண்ண போறதா சொன்னது எவனா இருந்தாலும் வாங்கடா என்ற போது இருக்குமிடம் தெரியாமல் ஓடியொளிந்தனர் விஷமிகள்.. திரும்ப வந்து கலைஞரிடம் இப்ப போங்க ஒரு பிரச்சனையும் வராதென்றார்.. கலைஞருக்கு ஒன்றென்றால்  துடித்துபோகிறவர் .. பொதுக்குழு கூட்டங்களில் கடைசியில் அமர்ந்திருப்பார்.. உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை சொல்வார்கள் கலைஞரின் கண்கள் மணியை தேடும் .. உடனே எழுந்து கலைஞர் பார்த்துக்கொள்வார் என்பார் கூட்டம் அமைதியாகும்.. அதனால் தான் மணி இறந்தபோது .. நீ இல்லாத தஞ்சையை நினைத்துபார்க்கலே என் குலைநடுங்குகிறதே என்றார்.. ஆம் அண்ணாவால் மேக்கரிமங்களத்து போக்கிரி என புகழபட்டவர் .. தஞ்சையின் விவசாயிகளின் பிரச்சனைகளை நுணுக்கமாக அறிந்தவர் .. ஒரு மாவட்ட செயலர் எப்படி பணியாற்றவேண்டுமென கோ.சி.மணியை கண்டு படிக்கவேண்டும்..

.தஞ்சையின் மாவீரன்..
மாவீரனுக்கு மரணமில்லை..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: