Shahul Hameed : இவர் பெயர், சம்சுதீன் காசிமி.. சென்னை பெருநகரில்,மக்கா பள்ளி வாசலில் தலைமை இமாம் என்ற பொறுப்பில் இருந்தவர்.. ஏதோ
குற்றச்சாட்டு காரணமாக இவரை, பள்ளி வாசல் நிர்வாகம் பணி நீக்கம் செய்து வெளியேற்றப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது!
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்று தெரியவில்லை.. சரி, அது போகட்டும்.
அண்மையில், இவர் பேசிய வீடியோ ஒன்றில்,
பெண்கள், முகநூல்/இன்ஸ்டாகிராம் போன்ற
இணைய தளங்களில், வந்தால்,அந்த பெண்கள் நரகத்திற்கு தான் போவார்கள் என்று,குறிப்பிட்ட அவர்,கூடவே, மற்றொன்றையும் கூறுகிறார்.......
"இணையத்தில் பங்கு பெறும் பெண்கள்
#விபச்சாரம் செய்பவர்கள்" என்று மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறார்,அவர்...
ஆனால், அவர் குறிப்பிட்ட, நரகம் குறித்து மட்டுமே விவாதம் நடந்து வருகிறது, சமூக
ஊடகங்களில்.....
மிகவும் நாசுக்காக, பெண்களுக்கு விபச்சாரிகள் என்று பெயர் சூட்டியதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடப்பட்டது...
அப்பட்டமாக, பெண்களுக்கு #விபச்சாரிகள் என்ற பெயர் சூட்டும் இவர் போன்ற நபர்களை
மிகவும் நுணுக்கமாக ஆதரிக்கும் போக்கும்
அங்கங்கே சில நண்பர்கள் பதிவுகளில் காண முடிகிறது...
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் இப்படி தான் இருப்பார்கள் என்று
பொதுவான ஒத்தடம் கொடுப்பதையும் கூட காண முடிகிறது...
மற்றொரு தரப்பு, "சம்சுதீன் காசிமி, எப்போதோ
பேசிய வீடியோவை இப்போது இணையத்தில்
பதிவு செய்து வருகின்றனர்; அதற்கு உள் நோக்கம் இருக்கிறது"என்றும், மற்றொரு தரப்பு,"மாநாடு என்ற சிம்பு நடித்த சினிமா
ஒன்று வந்துள்ளது; அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப மட்டுமே இந்த வீடியோவை இப்போது பேசு பொருளாக மாற்றி விட்டனர்"
என்றும் கதைக்கின்றனர்..
உண்மையில் இந்த வீடியோ,இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பேசியது தான்!
ஒரு வேளை, எப்போதோ பேசியது என்றாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, கடுமையான கண்டனத்திற்குரியது
தான்.. இப்படி அவர் பேசியது கிரிமினல் குற்றம் தான்...
அப்புறம் அந்த மாநாடு திரைப்படம்..
அந்த திரைப்படத்தை நோக்கி செல்லும் கவனத்தை திசை திருப்பி விடுவதற்காக மட்டுமே இது போன்ற வீடியோக்கள் குறித்த
விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது என்றெல்லாம்,ஒரு தரப்பினர் கூறுவது அப்பட்டமான சிறுபிள்ளைத்தனம்...
பெண்களுக்கு இப்படி ஒரு பெயர் சூட்டும்
இந்த நபர்,தொடர்ந்து இப்படி பேசுவதை
அனுமதிக்கக்கூடாது; அடிப்படை மனித உரிமைகளை மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையும் மீறி, இப்படி பேசும் நபர்களை ஆதரிப்பது, மத அடிப்படை வாதத்தை ஆதரிப்பது தான்..
பொதுவாக, மத அமைப்புகளில், கொள்கை முடிவுகள் எடுக்கும் இடங்களில், பெண்களுக்கு
எந்த இடமும் இல்லை என்பது கண்கூடு..
இப்படி ஒரு சூழலில், பெண்களுக்கு, இழிவான
பெயர் சூட்டும் சம்சுதீன் காசிமி போன்ற நபர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல,
அடிப்படைவாதத்தை ஆதரிப்பது கூடத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக