வி.ஆர். ஜெயந்தி : தலைவர் அவர்களுக்கு ஒயாத வேலை, 24, 25, 26, 27 தேதிகளில் தொடர் கூட்டங்கள். 27 அன்று செங்கல்பட்டில் மீட்டிங் இரவு 8.30 மணிக்கு முடித்து இரவே அரியலூர் கார் பயணம் மேற்கொண்டார்கள். அரியலூரில் அத்தனை நிகழ்ச்சிகள். தலைவரின்
அம்மாவிற்கு டைபாய்டு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அரியலூரில் மீட்டிங் முடித்து, அம்மாவை பார்த்து விட்டு இரவு பயணம் செய்து காலையில் 5 மணிக்கு சென்னை வந்து தயாராகி பார்லிமென்ட் போகிறார்கள். தலைவருக்கு உடல்நலம் சரியில்லை, காலில் வீக்கம் பிரச்சனையிருக்கிறது, ஓய்வில்லை. மக்களுக்காக கடந்த கூட்டத்தொடரில் அடாவடியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்டங்களை எதிர்த்து அவையில் பேசத்தேவையிருக்கிறது.
தலைவர் அவர்களின் உடல்நலன் காப்பது அவருடன் இருப்பவர்கள் கடமை.
தலைவரின் ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்து , சிலர் செய்யும் செயல்கள்
மற்றவர்கள் பேசும் நிலைக்கு ஆளாகிறது.
அவரின் பணி, நேர்மை , மக்கள் மேல் , தொண்டர்கள் மேல் கொண்ட அன்பு மரியாதை அறிந்தவர்கள் யாரும் அவரை தவறாக நினைக்கவோ, பார்க்கவோ சொல்லவோ இயலாது.
தலைவர் அவர்கள் வாழும் வீடு, அறை , தூங்கும் நேரம், மக்களுக்காக ஆற்றும் பணி தெரிந்தவர்கள்
இப்படி வீண் பழி சுமத்த மாட்டார்கள்.
#LeaderTholThirumavalavanMP
(Note: தொண்டர்கள் கட்சியினர் ரசிக மனநிலையில் இருப்பதில் தவறில்லை, ஆனால் எவற்றை படம் பிடிக்கலாம், எவற்றை படம் பிடிக்க கூடாது , எவற்றை பொது வெளியில் பதிவிடலாம், எவற்றை பதிவிடக்கூடாது என உணர்தல் மிக அவசியம், நாமே சர்ச்சைகளுக்கு வழி வகுக்கக்கூடாது, நான் உட்பட.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக