Kandasamy Kandasamy : உங்கள் நாகரீக அரசியலில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற.
சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரியவர் எப்பொழுதும் திமுக கரை வேட்டி அணிந்து கொண்டுதான் இருப்பார்.. சில மாதங்களுக்கு முன் கரையில்லாத வெள்ளை வேட்டி அணிந்து இருந்தார் என்னவென்று விசாரிக்க......
திமுக கரைவேட்டி சலவைக்கு போட்டிருந்தேன் திருப்பி வாங்க காசு இல்லை
எவ்வளவு என்று கேட்க 240 ரூபாய் என்று சொன்னார்
அதற்கு அடுத்து சொன்ன செய்தி வயசாகிப் போச்சு எவ்வளவு வெல
தெரியல மொத்தமா போட்டுட்டேன்
மூன்று பிரிவாகப் பிரித்து போட்டிருந்தால் சலவைக்கு போட்ட வேட்டியை வாங்கியிருப்பேன்
அதற்கு மேல் அவருக்கு பேச நா எழவில்லை
என்னிடமும் அந்த காசு இல்லை
நினைத்துப் பாருங்கள் திமுக தான் அவர்களுடைய அடையாளம் அந்த கரைவேட்டி தான் அவருடைய அடையாளம்
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் அவர் பெயர் தெரியாது
வாய்ப்பிருந்தால் இந்த வாரம் அவருடைய புகைப்படம் பகிர்கிறேன்
மழைக்கு எங்கேயோ போய் ஒடுங்கி கொண்டார்
எனக்குத் தெரிந்த அந்த நபரை நிச்சயம் வட்டம்... பகுதி போன்றவர்களுக்கும் தெரிந்திருக்கும்
இலவச பஸ் பாஸ் வாங்கினேன் இட ஒதுக்கீட்டில் கல்லூரி சீட் வாங்கினேன்
என்று முக நூலில் எழுதி
அண்ணன் அப்துல்லா அமைச்சர் ஆ ராசா
போன்றவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும்
நவீன நாகரீக அரசியல் எங்களுக்கு தெரியாது
ஆனால் கலைஞரை ஒவ்வொரு முறையும் முதல்வராக கூட இல்லை எதிர்க்கட்சித் தலைவராக உட்கார வைக்க வே
இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு காவல்துறை வரும் என்ற எதிர்பார்ப்புடன் உழைத்துக் கொண்டிருந்த உடன்பிறப்புகள் எங்கே என்று தெரியவில்லை
வடசென்னை வாழ்ந்தவர்களுக்கு தெரியும்
மிகப் பெரிய வீடு பாகத்தில் பிரிந்து இருக்கும்
எளியோருக்கு பின்பகுதி கிடைக்கும் அதற்கு நான்கு முதல் ஐந்து அடி வழி விட்டிருப்பார்கள்.. அதை சந்து வீடு என்று சொல்வோம்
கலைஞர் போராட்டத்தை அறிவித்த உடன்
நான்கைந்து வீடுகள் தள்ளி மொட்டை மாடியில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருக்க வேண்டும்
ஏனெனில் பாதுகாப்பு நடவடிக்கை என்று காவல்துறை காவல் நிலையத்தில் உட்கார வைத்துவிடும்
போவதற்கு ஒன்றும் பயமில்லை மறுநாள் போராட்ட இடத்தில் ஆஜராக வேண்டும்
அதனால் இருட்டில் அந்த வீடுகளைத் தாண்டி சென்று படுத்துக் கொள்வார்கள்
சைக்கிள் ரிக்ஷாவில் எம்ஜிஆர் படம் ஒட்டி வைத்திருக்கும் எச்சை
காவலரிடம் போட்டுக் கொடுத்து விடுவான்
காவலருக்கு பயம் மொட்டைமாடி தாண்டி போக
ஏனெனில் நான் ஏற்கனவே சொன்னது போல் திடீரென்று 5 அடி இடைவெளி இருக்கலாம் கீழே விழுந்தால் அவ்வளவுதான்
இப்படிப்பட்ட தொண்டர்களின் பெயரை கலைஞர் உச்சரிப்பார் என்ற காரணத்திற்காக மட்டுமே கழகத்தில் பணி புரிந்தவர்கள் பலர்
வேறு எதுவும் கிடைக்காது 🤣
இன்று நாகரிக அரசியல் பேசும் சில
ஆப்பாயில் அல்பைகளுக்கு
அது தெரிந்திருக்க ஞாயம் இல்லை
நீங்கள் இன்று எது திமுகவின் சாதனை என்று சொல்லி ஆட்சியில் அமர வைத்தார்கள்
அதைப் பெறுவதற்கு சில தொண்டர்கள் மட்டுமில்ல அவர்களின் தந்தைமார்களும் உதை வாங்கியிருக்கிறார்கள்
உங்கள் நாகரீக அரசியலில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக