புதன், 1 டிசம்பர், 2021

NEET 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான்

 Sadhu Sadhath  : எதால அடிவாங்கினாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டெங்கில் அது ஈ தமிலன்ஸ்தான் ...
NEET வந்த போது எதெல்லாம் நடக்கும்னு பயந்தேனோ அதெல்லாம் அப்படியே கூட இல்ல வேற லெவலுக்கு நடந்துகிட்டு இருக்கு ..
நீட்ட ஆதரிச்சவனெல்லாம் என்ன சொன்னானுவனா நீட் பாஸ் செஞ்சாதான் தரமான டாக்டர் கிடைப்பாங்கனு சொன்னானுவ ..
போன வருசம் கிட்டதட்ட 115000 பேர் நீட் எழுதி அதுல 39.6% பேர் நீட் பாஸ் ஆனாங்க அதாவது கிட்டதட்ட 45000 பேர்... இத்தனை ஆயிரம்பேர் நீட் பாஸ் செஞ்சாச்சே டாக்டர் சீட் கொடுத்தானுங்களானா அதுவும் இல்லை ..
ஏன்டா கொடுக்கலனா மொத்தமே 2447 சீட்டு தான் இருக்குங்குறான் .. இதுல என்ன பெரிய கொடுமைனா இந்த 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான் ... ஆண்ட பேண்ட சாதி அத்தனையும் சேர்த்து இரண்டே பேர்தான் ... எஸ்டி பிரிவுல மேனேஜ்மென்ட் கோட்டாவுல கூட ஒருத்தருக்கும் சீட் கிடைக்கல


திரும்ப வந்து அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லைனு எவனாச்சும் பெனாத்துனீங்க பேத்துடுவேன் ... இதுக்கு முன்னாடி எத்தனை பேர் சீட் வாங்கியிருதாங்கனு பாத்துட்டு வந்து பேசனும் ...
இப்ப நீட் என்ன புடுங்கிட்டு இருக்குனா ..  ஏழைங்கள விடுங்க மிடில்கிளாஸ் மாக்கானுங்க கூட இனிமே சீட் வாங்கவே முடியாது .. அந்த அளவுக்கு நீட் பணக்காரனுங்கள மட்டுமே பொருக்கி எடுத்து சீட் கொடுக்குற வேலைய தான் பாத்துகிட்டு இருக்கு ...
நீட்டுக்கு முன்னாடி மெடிக்கல் சீட் வாங்குறது மாரத்தான் ஓடுறமாதிரி .. எல்லோருமே ஓடலாம் யார் குறிப்பிட்ட நேரத்தில் ஓடி வர்றாங்களோ அவங்க எல்லோருக்கும் சீட் கன்ஃபார்ம் .. இதுல எனர்ஜி ட்ரிங்க் நல்ல கோச்சிங் எனர்ஜி புட் சப்ளிமென்ட் நல்ல ஷூ அதுஇதுனு ஏற்பாட்டோட ஓடுறவனுக்கும் சீட் கிடைக்கும் .. அதெல்லாம் இல்லாம வெறும் காலோட தண்ணிய மட்டுமே குடிச்சுகிட்டே ஓடி வந்தவனுக்கும் சீட் கிடைக்கும் ..
இப்ப என்ன சொல்றானுங்கனா அடிடாஸ் ஷு , கோச் , நல்ல புட் சப்ளிமென்ட் , எனர்ஜி ட்ரிங்க் கொடுக்க ஆளுனு எல்லாமே இருந்தாதான் மாரத்தானே ஓட வேண்டும் னு சொல்றானுங்க .. இதெல்லாம் இல்லாதவன் ஓடுதளத்துக்கே வரமுடியாம மொதல்லியே ஃபில்டர் செஞ்சுட்டு.. மாரத்தான நடத்துறானுங்க .. அதெல்லாம் இல்லாதவன் அடப்போடானு விட்டுட்டு போற மாதிரி
இந்த வருசம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட்டுக்கு அப்ளை செஞ்சதே மொத்தமே 4000க்கும் கீழதான் ...
ஹ்ம் என்ன புலம்பி என்ன ஆக போகுது .. எப்படியோ சொரணகெட்டு போய் சாவுங்க .. இதுல நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு பீத்திகிட்டு வேற கெடக்குறானுங்க ..

கருத்துகள் இல்லை: