Karthikeyan Fastura : மாநாடு திரைப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் Plot க்கு கதாநாயகன் இஸ்லாமியர் ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எனினும் மக்கள் மத்தியில் சினிமா ஊடகங்கள், பத்திரிக்கை ஊடகங்கள் பரப்பி வைத்திருக்கின்ற பொய்யான பொதுபுத்தி பிம்பத்தை உடைப்பதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள் இந்தக் கதையை ஏற்று நடித்த சிம்புவுக்கும் வாழ்த்துக்கள்
எனக்கு இந்தப்படத்தில் குறையாகபடுவது ஒரு அறிவியல் புனைவு கதையை அதன் இயற்பியல் விதிகளோடு விளக்கி அதிலுள்ள புதிர் என்னவென்று கூறி அதை அவிழ்ப்பது போல காட்டுவது சிறந்தது. ஹாலிவுட் மற்றும் பல்வேறு ஐரோப்பிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் வரும் Time loop திரைப்படங்கள் எல்லாவற்றிலும் இதை காணலாம். குவாண்டம் பிசிக்ஸ், Time A-theory பற்றிய கருத்தாக்கங்களை கற்பனைகளை விவரிப்பார்கள்.
இங்கே அதற்கு பதில் திரும்பவும் மத நம்பிக்கைகளுக்கு உள்ளே தான் Time loopற்கான காரணத்தை கூறுகிறார்கள். உஜ்ஜைனி காலபைரவர் ஆலயம் அதில் பிறந்த குழந்தை என்றுதான் செல்கிறது.
இவ்வாறு கூறுவதன் மூலம் அறிவியல் நிகழ்வுகளுக்கு மதத்தை காரணம் காட்டுவது பார்வையாளர்களை உண்மையை நோக்கிய அறிவியல் சிந்தனைக்கு இழுத்துச் செல்லாமல் அதற்கு நேரெதிராக மூடநம்பிக்கைகளை கட்டமைத்து அதற்குள் தள்ளி விடுகிறார் இயக்குனர்.
இவ்வாறான மூடநம்பிக்கைகளின் உச்சத்தில்தான் மாற்று மதத்தினரை எளிதாக வெறுக்கவும் அவர்கள் மேல் பழி போடவும் செய்கிறது. அதை வைத்து அரசியல் செய்ய முடிகிறது.
ஆக இயக்குனர் தனது நல்லெண்ணத்தை தானே உடைக்கவும் செய்கிறார். இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.
மற்றபடி YG மகேந்திரன் நடித்தது போலவே தெரியவில்லை. அவரது நிஜ வாழ்கை கொள்கையோடு அத்தனை பொருந்திப் போகிறது. SJ சூர்யாவின் காமெடியை ரொம்பவே ரசித்தேன்.
இன்னும் தமிழ் திரை உலகம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு இயக்குனர்கள் நிறைய படிக்க வேண்டும் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக