ஞாயிறு, 11 ஜூலை, 2021

தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

parents incident childrens tamilnadu government
nakkheeran.in - பகத்சிங் :ஒரே நாளில் இரண்டு குடும்பங்களில் பெற்றோரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் 5 குழந்தைகள் அரசு உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு வயது 50. இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கலையரசி, கடந்த 2013-ஆம் ஆண்டு விட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தனது ஒரு பெண் குழந்தை மற்றும் கோபிநாத் (வயது 17) வீரகபிலன் (வயது 15) ஆகியோரை தந்தை சிவராஜ் வளர்த்து வந்தார்.மகள் அரசு கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வரும் நிலையில், கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனது பிள்ளைகள் ஆதரவில்லாமல் தவிப்பார்கள் என்பதைக் கூட நினைக்காமல் சிவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்களும் (அதில் ஒருவருக்கு மனநிலை சரியில்லை) மனநலம், கண்பார்வை பாதிக்கப்பட்ட நடக்க முடியாத 80 வயது பாட்டியுடன் பாதுகாப்பு இல்லாத பழைய உடைந்த வீட்டில் வசித்து வருகின்றன. 
parents incident childrens tamilnadu government

தாய் இல்லாமல் தந்தை பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் தற்போது அவரையும் இழந்து படிப்பும், வாழ்க்கையும் கேள்விக் குறியாக நிர்கதியாய் நிற்கிறார்கள். இதில் சிவராஜின் மகள் பட்டப்படிப்பு படித்து வருவதால், அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கினால், தனது இரு தம்பிகளையும் படிக்க வைப்பதுடன் வயதான பாட்டியையும் கவனித்துக் கொள்வார்.

 அதேபோல் கொத்தமங்கலம் சுண்டாங்கிவலசைக் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் பூக்கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ராசாத்தி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது மகன்கள் பிரகாஷ் (வயது 17), மதன் (வயது 12) ஆகிய இருவருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வளர்த்து வந்தார். ஆனால் கடந்த ஜூலை 6- ஆம் தேதி இளஞ்செழியனும் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன்கள் இருவரும் மனமுடைந்துவிட்டனர். சிறுவயதிலேயே தாய், தநதையை இழந்து தவிக்கும் இவர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

 இப்படி வெவ்வேறு காரணங்களால் தாய், தந்தையை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு புதிய அரசு அடையாளம் கண்டு உதவிகள் செய்திட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை: