திங்கள், 12 ஜூலை, 2021

ஆந்திராவுக்கு 11.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது :

(file video) .hindutamil.in :  வாணியம்பாடி மற்றும் குடியாத்தம் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 2 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திரா மாநிலத்துக்கு டன் கணக்கில் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினர் குடியாத்தம் மற்றும் வாணியம்பாடி பகுதி களில் கடந்த சில நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்றாம் பள்ளி அடுத்த பச்சூர் கூட்டுச் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை யிட்டதில், அதில் 2.5 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்திச்செல்வது தெரிய வந்தது.



இதைத்தொடர்ந்து, லாரியுடன் 2.5 டன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரான வாணியம்பாடியைச் சேர்ந்த பிரவீன்குமார் (22), உடனிருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த சுபாஷ் (29) என்பவரை கைது செய்தனர்.

9 டன் அரிசி பறிமுதல்
அதேபோல, குடியாத்தம் அடுத்த அகரம்சேரியில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக ஆந்திரா நோக்கிச்சென்ற லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

அதில், 9 டன் ரேஷன் அரிசி ஆந்திரமாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்து அரிசி கடத்திலில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: