வெள்ளி, 16 ஜூலை, 2021

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் திரு ஸ்டாலின் 2வது பினராயி விஜயன், 3 வது நவீன் பட்நாயக் ...

May be a Twitter screenshot of 3 people and text

ஆலஞ்சியார்  : ஆட்சி பொறுப்பேற்று இரண்டே மாதங்களில் இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதென்பது சாதாரண காரியமில்லை
கடின உழைப்பு தகுதியான அமைச்சர்கள், அதிகாரிகள் என நிர்வாகத்தின் திறன்காட்டி இந்திய ஒன்றியமே உற்றுநோக்க வைத்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்பிமை ஸ்டாலின் அவர்கள்
வாக்களித்தவர்கள் மட்டுமல்ல எதிர்த்தவர்களும் சிறந்த ஆட்சியென புகழதக்கவகையில் நல்லாட்சியை தந்து தமிழகத்தை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்..
ஆட்சிபொறுப்பிற்கு வந்த போது பெருந்தொற்றின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்துக்கொண்டிருந்தது அதிமுக  மடையர்களின் ஆட்சியில் நிர்வாக குளறுபடிகள் ,கொரோனா வயதானவருக்குதான் வருமென எள்ளிநகையாடி தன் "ஆண்டைகளின்" மனம்குளிற தமிழகத்தை குட்டிசுவராக்கி நிறுத்தியிருந்தார்கள் .. அரைகுறைகள் கால்நக்கிகள் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்துவிட்டு கைப்பிள்ளையாக இருந்தார்கள் ..


தடுப்பூசி போடுவதில் கூட 13% வீணாக்கி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தலைகுனிய வைத்தார்கள் ..மக்கள் தீர்ப்பில் மகத்தான வெற்றியோடு அறியணையேறிய தளபதி அவர்கள் கொரோனாவை வென்றால் தான் எனக்கு நிம்மதி என அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டு தொடர்ந்து கண்காணித்து தொடக்கத்தில் 30,000 தொட்ட கொரோனை தொற்றை 2400 க்குள் கட்டுபடுத்தியிருக்கிறார்..
..
ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா கால உதவிதொகை வழங்கல் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் என சமூகநீதியோடு ஆட்சி செய்கிறார் "அப்பனை"போல் அதிகாலையே
 எழுந்து அமைச்சர்களை அதிகாரிகளை அழைத்து வேலைவாங்குகிறார் .. அதிமுக ஆட்சியென்றால் சும்மா இருந்தாலே போதும் திமுக ஆட்சியென்றால் துரிதமாக வேலை செய்யவேண்டும்  என அதிகாரிகளே சொல்கிறார்கள்..
ஒரு அரசு எப்படி செயல்படவேண்டுமென திமுக ஒன்றியத்திற்கே வழிகாட்டியிருக்கிறது..
..
#குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு"..
என்றான் வள்ளுவன்..
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்..
ஆம் இது குடிமக்களுக்கான ஆட்சி
வந்தேறிகள் இம்மண்ணில் இட்ட எச்சங்களையெல்லாம் துடைத்தெறிந்து மண்ணின் பெருமையை இனத்தின் உரிமையை நிலைநாட்டி பாகுபாடற்ற சமத்துவ சமூகநீதியை பறைசாற்றும் ஆட்சி.. இங்கே பகைவரும் பிரமித்துநிற்கிறார் .. செயலால் எம் முதல்வர் தமிழனை தலைநிமிர செய்தது கண்டு .. உழைப்பும் நேர்மையும் நெஞ்சுரமும் அஞ்சாமையும் கண்டு எதிரிகள் வாயடைத்து நிற்கிறார்கள் .. அதிவேக படையோட்டம் நல்ல நிர்வாகதிறமையாளர்கள் அதிலும் நேர்மையான அரசின் தலைவர் தலைமையில் பணியாற்றுவதால் தமிழகம் மிளிர்கிறது..
..
கலைஞரின் தமிழெடுத்து சொல்கிறேன் ..
யாரேனும்  கண்டதுண்டா..
யாரேனும் கேட்டதுண்டா
ஆட்சிக்கு வந்து 60வதே நாட்களில்
தமிழகத்தை இந்திய ஒன்றிய மாநிலங்களில் முதன்மையாக்கிய வரலாற்றை யாரேனும் கண்டதுண்டா.. புதிய ஆட்சிக்கு நூறுநாளேனும் அவகாசம் வேண்டும்.. ஆனால் 60 நாட்களில் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர்
என பெயரெடுத்திருக்கிறார்..
இன்னும் நிறைய பணிகள் காத்திருக்கிறது..
கடந்த அடிமை அதிமுகஆட்சியின் ஊழலை வெளிகொணர்ந்து படுபாவிகளை புழலுக்குள் அனுப்பும் வேண்டும் .. அடிமைகளால் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் ..
..
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் கால்நூற்றாண்டு திமுகதான் ஆட்சியமைக்கும் .. இதுமட்டும் நடந்துவிட்டால் போதும் நாம் நம் தலைமுறைகள் நூறாண்டுகள்  நிம்மதியாய் வாழும்
வாழ்த்துகள் @cmotamilnadu   முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் -  ..ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: