தமிழக பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை அமைக்கவும், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ''8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியைகளை நியம்மிக்க வேண்டும் என்றும் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதுகுறித்து அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, ''பள்ளிகளில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் பொறுப்பாளராக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட பிரதியை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக