ஞாயிறு, 25 ஜூலை, 2021

வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து’’ - எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு

 puthiyathalaimurai.com  : முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.


விளையாட்டு உலகின் திருவிழா என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்தான். காலம் காலமாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய சிறப்பு மிக்க விளையாட்டு போட்டி இது. தற்போது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வருவது மாடர்ன் ஒலிம்பிக்கின் 32-வது ஒலிம்பிக் விளையாட்டாகும். இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இவர்களை தவிர அகதிகள் ஒலிம்பிக் அணியை சார்ந்த வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே அகதிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே அகதிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு.

அப்படி தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடி செல்பவர்கள், அவர்களது அடையாளம் தொடங்கி அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவது உண்டு.

இந்த நிலையில் அகதிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் அகதிகள் ஒலிம்பிக் அணி. கடந்த 2015-இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்திருந்தார்.

அவர் சொன்னபடி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் தடகளம், ஜூடோ மற்றும் நீச்சல் என மூன்று பிரிவுகளில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

இவர்கள் அனைவரும் எந்த நாட்டையும் சாரந்திடாத இண்டிபென்டென்ட் வீரர்களாக பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

விளையாடுவதற்கான திறன் இருந்தும் அதற்கு முறையான பயிற்சியும், நிதி ஆதாரமும் இல்லாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, Olympic Scholarships for Refugee Athletes program என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதில் எந்தவித நாட்டையும் சாராமல் அகதிகளாக உள்ள தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படி சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களே அகதிகள் ஒலிம்பிக் அணியில் இடம் பிடிக்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர்கள் விவரம்!

அகதிகள் ஒலிம்பிக் அணியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவர்களுக்கு 13 நாடுகளில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்பட்டது.

தடகளம், பேட்மிண்டன், குத்துச் சண்டை, சைக்கிளிங், ஜூடோ, கராத்தே, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேக்வொண்டோ, பளுதூக்குதல், மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளில் இந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அகதிகள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் எந்தவொரு நாட்டையும் சார்ந்தவர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள 82.4 மில்லியன் அகதிகளின் குரலாக அவர்களது பங்கேற்பு அமைந்துள்ளது சிறப்பு.

இதுவரை அகதிகள் அணி சார்பாக எந்தவொரு வீரரோ அல்லது வீரங்கனையோ ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை. இருப்பினும் இப்போதைக்கு அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடுவதே சிறப்பான தருணம். வரும் நாட்களில் இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வெல்கின்ற ஒலிம்பிக் பதக்கம் பல தாக்கங்களை ஏற்படுத்தும். அதன் மூலம் மாற்றம் உருவாகும் என நம்புவோம்.

கருத்துகள் இல்லை: