Veeramani Veeraswami : தண்டவாளத்தில் ஓடும் சைக்கிள்! இரயில்வே ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
உலகில் மிகப்பெரிய இரயில்வே துறையினைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஒரு இடத்தை இரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது.
அதேபோல் தண்டவாளங்களில் பழுது ஏற்பட்டால், இரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்றாக வேண்டும்.
இந்த இரு பணிகளையும் செய்வதற்கு இரயில்வே ஆய்வு வண்டிகளை (Rail Inspection Cart) ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் இல்லாத பட்சத்தில், இரயில்வே ஊழியர்கள் நடந்துதான் சென்றாக வேண்டும். இது கால விரயத்தை ஏற்படுத்தும்.
இந்த பிரச்னைகளைச் சரி செய்வதற்காக, இந்திய ரயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரால், இலகு ரக இரயில்வே சைக்கிள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
சாலையில் மட்டுமே ஓட்டக்கூடிய சைக்கிளை, இரயில்வே தண்டவாளத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்துள்ளனர்.
இந்த சைக்கிள் தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேற்கு ஆஜ்மீர் மூத்த கோட்ட பொறியாளர் (Sr DEN - Senior Divisional Engineer) பங்கஜ் சோயின் என்பவர்தான் இந்த கண்டுபிடிப்பிற்கு பின்னால் இருக்கும் மனிதர். இந்த இரயில்வே சைக்கிளின் எடை 20 கிலோ மட்டுமே. எடை மிகவும் குறைவு என்பதால், மிக எளிதாக தண்டவாளத்திற்குக் கொண்டு வந்து பயணிக்க முடியும். தண்டவாளத்தில் இருந்து எளிதாக எடுக்கவும் முடியும்.
ஒரே ஒரு நபரே இதனை எளிதாக செய்து விட முடியும். இந்த சைக்கிளின் சராசரி வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆகும். அதே சமயம் ஒருவரால் அதிகபட்சமாக மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும். சாலையில் ஓடும் மற்ற சைக்கிள்களைப் போலவே, இரயில்வே சைக்கிளும் இரண்டு பேரைச் சுமந்து செல்லும் திறனைப் பெற்றுள்ளது.
இரண்டு பேர் அமர்ந்து சென்றாலும், சீரான வேகத்தைப் பராமரிக்க முடியும். சைக்கிளை வாங்கியது, அதில் மாற்றம் செய்தது என அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. இரயில்வே பணிமனையில் இந்த தனித்துவமான சைக்கிளை உருவாக்க முடியும்.
ஊழியர்களின் விலை மதிப்பில்லாத நேரத்தைச் சேமிப்பதற்கு இந்த இரயில்வே சைக்கிள் உதவி செய்யும். இந்த சைக்கிள் மூலம் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை எளிதாக சென்றடையலாம். இரயில்வே ஆய்வு வண்டிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நடந்து செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தண்டவாளங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் இந்த இரயில்வே சைக்கிள் உதவும்.
சேவையில் இல்லாத ரயில் வண்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட பழைய சக்கரங்கள் மற்றும் இரண்டு இலகு ரக இரும்பு குழாய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த இரயில்வே சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான முறையில் நட்டு, போல்ட் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் சமயங்களில் சைக்கிளில் இதனைப் பொருத்தி கொள்வதும், அகற்றுவதும் எளிது.
காணொளி இதோ=
https://youtu.be/yZPGGpY3u9c
Railway bicycle created by Indian Railways officer for patrolling tracks.
India has the largest railway network in the world which is spread over 1.23 lakh kms Indian Railways is widespread with tracks laid across large tracts of the country.
And while there’s momentum in recent years on wide spectrum of requirements including catering and better trains, maintaining endless miles of tracks need innovative solutions. And that’s what one railway officer has created, a light weight railway bicycle. Pankaj Soin, Sr DEN, West Ajmer is the man behind the project.
The requirement was need based considering the stretch in question is difficult to approach but that’s no excuse for a slack in maintenance.
Old wheels from unserviceable rail carts were used together with an old cycle, and two lightweight iron pipes. A wheel was positioned ahead of the cycle and attached to it, and another to the other track line.
The front wheel functions for alignment, and second wheel to balance the railway bicycle. Simple nut-bolt fixtures were used to attach the fabricated bits for easy assembly, and dismantling.
The rear, or second wheel arrangement sits on the second rail so the unit is fully balanced. In essence, it’s a cycle designed to be ridden on railway track, quite literally that. The balancing wheel is connected to the cycle by being attached the the rear cycle wheel trellis. The same is done at the front, creating what looks like a rudimentary triangular structure but which is efficient in its simplicity.
Time Saving Riding the railway bicycle saves on precious time to reach a repair location as the track man can simply cycle to a required spot instead of having to walk to a repair site, or wait for a rail cart to be brought on track.
It’s a faster way to assess and inspect a track before a train passes. This is especially helpful during monsoon when one needs to inspect bridge approach locations, and vulnerable locations after a heavy shower.
The assessment needs to be completed in quick time before a passenger train approaches sections of track that are identified as vulnerable, or need to be regularly checked. When a loco pilot sends out a jerk message, the track man can quickly reach said site.
There’s no doubt it’s a better way to get to a checkpoint as part of routine daily checks, and for patrolling during hot Indian summers. The lightweight cycle structure is a mere 20 kgs on scale. This makes it convenient to lift on and off tracks, and can be done by a single person.
Average speed is pegged at 10 kmph, and one can speed upto 15 kmph. As with any cycle, railway cycle is capable of carrying two people while maintaining the same speed. Fabrication cost as well as acquiring an old cycle can all be done in Rs 5,000, and can easily be undertaken at a railway workshop.
Tweaking and modifying the basic structure can help serve different sections of Indian Railways. Safety It is not clear how safe this new system is. One would argue that the repair-man will take the cycle out only on tracks that are closed. But that cycle violates the safety guidelines.
TCAS (Train Collision Avoidance System) ensures all rail vehicles including the maintenance equipment is traceable at anytime. But in this case, the cycle riding repairman might not be traceable. And it is very easy for somebody to forgot there is a repairman out there on track with cycle and open the track for traffic. There seems to be a fatal flaw in this system. Whoever uses it, is in extreme danger of being run over by train. Even if the person runs away after seeing a train, the cycle on track could cause serious damage to infrastructure and could even lead to derailment.
நன்றி= மேற்கு ஆஜ்மீர் மூத்த கோட்ட பொறியாளர் (Sr DEN - Senior Divisional Engineer) அன்பர் பங்கஜ் சோயின் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக