திங்கள், 26 ஜூலை, 2021

பாதிரியார் பொன்னையா இன்னொரு ஒவைசி .. கன்யாகுமரி நாகர்கோயில் திமுக வாக்குகளை மடைமாற்றிய ஆர் எஸ் எஸ்...

May be an image of 1 person and standing

Ganesan Arivoli   :   கன்னியாகுமரியில் பாஜக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதற்கும், சென்ற முறை 1,700 வாக்கு வாங்கிய சீமான் இம்முறை 14,100 வாங்கியதற்கும் என்ன காரணம்?
இவையே ஆஸ்டின் தோற்றதற்கு முக்கிய காரணங்கள்...
நாகர்கோவிலிலும் 1800 ஓட்டு வாங்கிய சீமான் இம்முறை 10,800 ஓட்டு.
இங்கு பாஜக வெற்றியை தீர்மானிப்பதை தாண்டி வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி.
திமுக வின் வெற்றி நாங்க போட்ட பிச்சை - பாதிரியார் பொன்னையா
ஆனால் ஓட்டு போட்டது சீமானுக்கு. இப்ப வந்து வெற்றிக்கு உரிமை கொண்டாடுறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மூன்றில் போட்டியிட்டு இரண்டு தொகுதியில் தோற்றது. இவர மாதிரி ஆட்கள் அங்கு RSS religious polarisation செய்ய உதவியதே காரணம்.


RSS நேரடியாக மோதிவிடலாம். இவரை போன்றவர்களை இனம் கண்டு அடக்குவதே கடினம். பீகார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற ஒவைசியின் அரசியல் முக்கிய காரணம். மொபைல் ஒட்டுகேட்பு விவகாரத்தில் இவர்கள் பெயர் இல்லாதது, இவர்கள் மோடி-அமித் ஷா அரசியல் கணக்குகளுக்கு உதவுபவர்கள் என்ற சந்தேகத்தை வலுபெற செய்கிறது.

2021 தேர்தலில் திமுக கூட்டணி வாங்கிய வாக்கு 45.4% . இதில் அனைத்து தரப்பினரின் பங்கும் இருக்கிறது. எனவே திமுக வெற்றியை யாரும் தனியாக உரிமை கொண்டாட முடியாது. இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
 நாகர்கோவில் மற்றும் கோவை மாவட்டங்களில் பாஜக வளர இவர மாதிரி ஆட்கள் தான் காரணம்.
 பாதிரியார் போர்வையில் மத அரசியல் செய்து பிழைப்பவர்கள். இவருக்கும் காவி சாமியார்களுக்கும் வித்யாசமே கிடையாது.
  இவர மாதிரி ஆட்கள் இனி நாங்க 60%, 70% என மத அரசியல் செய்ய யோசிக்கும் அளவுக்கு பார்த்து பண்ணிவிடுங்க

May be an image of text that says '2016 2016 Tamil Nadu Legislative Assembly election: Kanniyakumari Party Candidate DMK Votes % S. Austin AIADMK Thalavai 89,023 42.41 Sundaram BJP 83,111 39.59 M. Meena Dev DMDK 24,638 11.74 D. Aathilinga Perumal 6,914 NTK V. Bala 3.29 subramaniam 1,732 0.83 NOTA None of the Above 1,570 0.75 Margin of victory 5,912 Turnout 2,09,924 75.07 DMK gain from AIADMK Registered electors 2,79,651 Swing'

May be an image of text that says '2021 2021 Tamil Nadu Legislative Assembly election: Nagercoil Party Candidate BJP Votes % M. R. Gandhi .....* % ..... DMK N. Suresh Rajan 88,804 48.21 NTK 77,135 41.88 Vijayaragavan MNM 10,753 Maria Jacob Stani 5.84 Raja S. AMMK 4,037 2.19 Ammu Anto I. NOTA 1,094 None of the Above 0.59 930 0.5 Majority 11,669 6.33 Turnout BJP gain from DMK 1,84,185 Swing'

May be an image of text that says '2021 2021 Tamil Nadu Legislative Assembly election: Kanyakumari Party Candidate Votes % AIADMK ...... % ........ Thalavai Sundaram DMK 109745 48.8 S. Austin NTK 93532 41.59 SASIKALA R Makkal 14140 6.29 Needhi Maiam SELVAKUMAR P.T. 3106 1.38 NOTA None of the Above 1096 0.49 Majority 16213 Turnout AIADMK gain from DMK Swing'

May be an image of text that says '2016 2016 Tamil Nadu Legislative Assembly election: Nagercoil Party Candidate Votes DMK % N. Suresh Rajan ±% ............. BJP 67,369 38.86 +3.43 M. R. Gandhi AIADMK 46,413 26.78 A. Nanjil Murugesan +3.91 MDMK 45,824 26.43 -13.58 Christin Rani NTK 5,803 P. M. Dhanam 3.34 -15.09 1,855 NOTA None of the 1.07 +1.07 Above 1,802 1.03 1.03 Margin of victory 20,956 12.09 Turnout 1,73,324 65.80 Registered electors 2,63,449 DMK gain from AIADMK Swing'

கருத்துகள் இல்லை: