செவ்வாய், 27 ஜூலை, 2021

கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ்! கர்நாடகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்!

  Velmurugan P  -  Google Oneindia Tamil :  பெங்களூரு: கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். சுமார் 17 சதவீதம் இவர்கள் தான் உள்ளனர்.
இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் கர்நாடகாவில் அதிகம் பேர் முதல்வராக இருந்துள்ளனர். கர்நாடகாவில் பசவராஜ் பொம்யை சேர்த்து, இதுவரை பதவி வகித்த 20 முதல்வர்களில் 8 பேர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நிஸான் மேக்னைட் காரை உங்கள் ஊரில் டெஸ்ட் டிரைவ் செய்ய எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர் - இங்கே க்ளிக் செய்யுங்கள்!
கர்நாடகாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள் பி.எஸ்.எடியூரப்பா வீரசைவ-லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த லிங்காயத் சமுதாயம் தான் கர்நாடகாவில் பாஜகவின் முக்கிய ஆதரவு தளமாக கருதப்படுகிறது. ஒரு சமூகம தான் வரலாற்று ரீதியாக கர்நாடகா மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.

அதன் காரணமாக மாநில அரசின் முக்கிய அமைச்சர்கள், முதல்வர்களாக லிங்காயத் சமுகத்தில் உள்ளளனர்.

அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை 75வயதை கடந்துவிட்டதால் கட்சி கொள்கை படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடாகவில் 1956ம் ஆண்டு முதல் 20 முதல்வர்களில் 8 பேர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதியில் 140 தொகுதிகளில் அதிக அளவு வசிக்கிறார்கள் குறிப்க 90 தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத் சமூகத்தினர் உள்ளனர்.

எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வைத்தால் லிங்காயத் மடாதிபதிகளும் மக்களும் அதிருப்தி அடைந்த நிலையில் அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்வராக பாஜக தலைமை அறிவித்திருக்கிறது என்றால், எந்த அளவிற்கு செல்வாக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒரே சமூகம் என்பதை தாண்டி பசவராஜ் பொம்மை எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எடியூரப்பாவிற்கு நெருக்கமானவர் என்பதால் பசவராஜ் பொம்மையை முதல்வராக முன்மொழிந்துள்ளார் எடியூரப்பா. கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. 2023ல் தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை பசவராஜ் பொம்மை முதல்வராக நீடிப்பார் என்று எதிரபார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: