செவ்வாய், 27 ஜூலை, 2021

நடிகை யாஷிகா விபத்தில் பலியான தோழி இவர் தான்: சகோதரியின் உருக்கமான போஸ்ட் வைரல்


tamil.samayam.com : நடிகை யாஷிகா தன் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த பவானி(28), செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரிக்கு சென்றார். பார்ட்டி பண்ணிவிட்டு அவர்கள் சனிக்கிழமை இரவு காரில் சென்னை திரும்பினார்கள்.
காரை யாஷிகா ஓட்டி வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் நிலைதடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த யாஷிகா உள்ளிட்ட 3 பேரும் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாஷிகா குடிபோதையில் கார் ஓட்டவில்லை, ஆனால்...
இந்நிலையில் பவானியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பவானி குறித்து அவரின் சகோதரி ஷ்ராவனி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.



அதில் ஷ்ராவனி கூறியிருப்பதாவது,

பவானி பற்றி விசாரிப்பதற்கு நன்றி. ஆனால் தற்போது நாங்கள் இருக்கும் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

நம் அன்புக்குரிய பவானி உயிருடன் இல்லை என்பதை ஏற்க நாம் அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரியும். இந்த சோகமான நேரத்தில் அமைதியாக இருப்போம். உங்களின் அன்புக்கும், இரங்கலுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பவானி அமெரிக்காவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம். கார் விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு, வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு சுயநினைவு திரும்பியதும் போலீசார் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்.

காரை வேகமாக ஓட்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: