திங்கள், 4 மே, 2020

பெண்கள் குடிப்பதை பெரிது படுத்துவது சரியா?

Shalin Maria Lawrence "  : அமெரிக்க அரசில் பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன்.
அமெரிக்காவின் முதல் பெண்ணாக இருந்த மிஷல் ஒபாமா.
ஜெர்மனியின் அதிபர் எங்கெலா மெர்கெல்
நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
கிறிஸ்டின் லகார்டு ,உலக வங்கியின் தலைவர்
எலிசபெத் மகாராணி
இளவரசி டயானா
இரும்பு பெண்மணி மார்கரெட் தாட்சர்
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்
கல்பனா சாவ்லா
ஜாய்ஸ் மேயர்
தீபிகா படுகோனே
இவர்களுக்கு உள்ள ஒற்றுமை -இவர்கள் எல்லோருமே மது அருந்துவார்கள்.
நாம் பெருமையாக நினைக்கும் வரலாற்றில் நிலைத்த பெண்கள் ,உலக அளவில் இன்றைக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நாம் பார்க்கும் பெண்கள் பலருக்கும் மது பழக்கம் இருந்து,இருக்கிறது.
நோபல் பரிசு பெண்கள் ,சமூக அறிஞர்கள் ,நடிகைகள் ,உலக பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள்,விஞ்ஞானிகள் ,அரசியல் வாதிகள் ,அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ,சமூக போராளிகள் ,மேற்கத்திய பெண் பாஸ்டர்கள் குடிக்க செய்கிறார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ அவர்களை நாம் விரும்புகிறோம்,கவர படுகிறோம் ,அவர்களை ரோல் மாடல்களாக வைத்திருக்கிறோம், அவர்களின் உழைப்பின் பயனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
நாம் மிகவே மதிக்கும் இவர்களில் வாழ்வியல் பழக்கத்தால் நாம் நிச்சயம் இவர்களை வெறுக்க போவது இல்லை.
இந்தியாவிலும் பல புகழ் பெற்ற பெண்கள் மது அருந்துகிறார்கள்.
ஆனால் இதை எல்லாம் நாம் கண்டு கொள்வதில்லை.
இவர்களை பற்றி எல்லாம் ஒரு புனித பிம்பத்தை கட்டமைத்து இருக்கிறோம்.
பிம்பங்களை தாண்டி பார்த்தால் உலகெங்கும் உள்ள பெண்கள் அவர்களுக்கான மகிழ்ச்சியை அவர்கள் அளவில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் வைன் ஷாப்பின் முன் நிற்கும் ஒரு சராசரி பெண்ணை பார்த்தாள் உங்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.
பெண்கள் குடிப்பது என்பது ஒரு வாழ்வியல் தேர்வு. ஆண்கள் குடிப்பதை போல தான் அது.
இன்னும் சொல்லப்போனால் ஆண்களைப்போல் துக்கத்தைப் போக்கிக் கொள்ள பெண்கள் குடிப்பது இல்லை. சமூக காரணங்களுக்காகவும் மற்றும் பிடிக்க பிடிக்கிறது என்பதற்காகவும் குடிக்கிறார்கள்.
அதனால்தான் குடியை விடுவது என்பது ஆண்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயமாகவும் , பெண்களுக்கு சுலபமான விஷயமாகவும் இருக்கிறது.
மேலும் எந்த பெண்ணும் குடித்துவிட்டு ரோட்டில் வீண் சண்டை வலிப்பதில்லை, குடித்துவிட்டு யாரையும் வன்புணர்வு செய்வதில்லை, குடித்துவிட்டு பொது இடங்களில் யாரிடமும் தவறாக நடந்து கொள்வதில்லை. குடித்துவிட்டு பிளாட்பாரத்தில் உறங்கும் ஆண்களைப் பார்த்து இருக்கிறீர்கள் அப்படி பெண்களை பார்த்து இருக்கிறீர்களா?
உலகெங்கும் உள்ள பெண்கள் குடிப்பதினால் அவர்களின் தனிமனித வாழ்வில் ஏதாவது சிக்கலை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? இல்லை அவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சி தான் நின்று விட்டதா?
மேலே சொன்ன பெயர்களைப் பார்த்தால் இல்லை என்றுதானே தெரிகிறது.
அப்படி இருக்க பெண்கள் குடிப்பது என்பதே ஆண்கள் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும்?
முதலில் பெண்கள் குடிப்பதை பெண்களை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும்?
ஒரு மிக சர்வசாதாரண வாழ்வியல் தேர்வை குற்றமாக ஆண் பார்ப்பதும் புரட்சியாக பெண் பார்ப்பதும் ஒரே வேரிலிருந்து தோன்றும் மன நிலைதான்.
If someone likes to drink let them drink.Dot.
There is nothing feminine or masculine about drinking.
Cheers.

கருத்துகள் இல்லை: