வெள்ளி, 8 மே, 2020

பெண்கள் மாதவிடாய் ஶ்ரீமத் பாகவதம் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா ISKCON நிறுவனர்

Dhinakaran Chelliah : பெண்கள் மாதவிடாய் ஶ்ரீமத் பாகவதம் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா
ISKCON
இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு கோபம் வருவது நியாயமே, என்மீது கோபத்தை வெளிப்படுத்துவதை விட ஶ்ரீமத் பாகவதம் நூலை எழுதியவர் மீது வெளிப்படுத்துவதே சரி!
எதோ ஒரு சில கதைகளை தேடிக் கண்டுபிடித்து பதிவாக எழுதுகிறேன் என்றால் அது முற்றிலும் தவறானது, முழுக்க முழுக்க இது போன்ற மனிதமே இல்லாத ஆபாசமான கதைகளே புராணங்களில் உள்ளன.தயவு செய்து புராணங்களைப் படியுங்கள் உண்மையை உணர்வீர்கள்! இனி ஶ்ரீமத் பாகவதப் புராணக் கதைக்கு வருவோம்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் விளக்கத்தினை ஶ்ரீமத் பாகவதம் தெரிவிக்கிறது.
śaśvat-kāma-vareṇāṁhas
turīyaṁ jagṛhuḥ striyaḥ
rajo-rūpeṇa tāsv aṁho
māsi māsi pradṛśyate (SB 6:9:9)
விஸ்வரூபா எனும் மூன்று தலையுடைய பிராமணன் ரகசியமாக அஸுர்ர்களுக்கு ஹவிர்பாகம் கொடுத்தது இந்திரனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

இந்திரன் அவனது மூன்று தலைகளையும் அறுத்தான்.இந்தப் பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் சேர்ந்தது. தனது இந்தப் தோஷத்தை நான்காகப் பிரித்து நிலம்(பூமி) நீர் மரம் பெண் என நால்வருக்கும் பகிர்ந்தளித்தான். இதற்கு பிரதிபலனாக அவர்கள் கேட்ட வரங்களையும் இந்திரன் அளித்தான்.
பூமியில் உள்ள பள்ளங்கள் தாமே மறைய வேண்டுமென வரம் கேட்டு ப்ரஹ்ம ஹத்தியின் நான்கின் ஒரு பாகத்தை பூமி ஏற்றுக் கொண்டது.இதுதான் பூமியிலுள்ள களர் நிலமாக உள்ளதாம்.எத்தனை முறை வெட்டினாலும் தளிர்க்க வேண்டும் என மரங்கள் ப்ரஹ்ம ஹத்தியில் ஒரு பாகத்தை ஏற்றுக் கொண்டன.அதனால்தான் மரங்களை வெட்டினாலும் தளிர்க்கின்றன. பெண்கள் பிரசவ நேரம் வரை உடலுறவு சுகத்தை அனுபவிக்கும்படியான வரத்தைப் பெற்றுக் கொண்டனர். அந்தப் பாபமே மாதாமாதம் மாதவிடாய் எனும் இரத்தப் போக்காக வெளிப்படுகிறது.( ஶ்ரீ பாகவதம்/ஸ்ரீமத் பாகவதம் 6:9:9 )
Translation:
In return for Lord Indra’s benediction that they would be able to enjoy lusty desires continuously, even during pregnancy for as long as sex is not injurious to the embryo, women accepted one fourth of the sinful reactions. As a result of those reactions, women manifest the signs of menstruation every month.
Purport:
Women as a class are very lusty, and apparently their continuous lusty desires are never satisfied. In return for Lord Indra’s benediction that there would be no cessation to their lusty desires, women accepted one fourth of the sinful reactions for killing a brāhmaṇa.
(Excerpts from Srimad-Bhagavatam translated by Srila Sri Prabhupada,founder of ISKCON )
ஶ்ரீபாகவதம் தமிழில் வெளிவந்த நூலின் பகுதியை தேடிக் கண்டுபிடித்து அதையும் இணைத்துள்ளேன்.
எத்தப் புராணத்தைப் படித்தாலும் இப்படியான செய்திகள் நிறைந்துள்ளதைக் காணலாம்.
மனதைப் புண்படுத்துவதற்காக இதை எழுதவில்லை, உண்மை அதுதான்.
மேலுள்ள ஶ்ரீ பாகவதக் கருத்தை ஏற்றுக் கொள்ளாத இந்து வைதீக சனாதன பெண்கள் தங்களது எதிர்ப்பை இனிமேலாவது தெரிவிப்பார்களா?

கருத்துகள் இல்லை: