சனி, 9 மே, 2020

வெளியில் இருப்பது ‘கிம்’ இல்லை- வடகொரிய அதிபர் டபிள் ஆக்டிங்?

splco.me/tam : வெளியில் இருப்பது ‘கிம்’ இல்லை- வடகொரிய அதிபரை துரத்தும் சர்ச்சை 21 நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உண்மையான கிம் தானா அல்லது உடல் இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறா என்ற புதிய சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 21 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்திருந்தார். அதனால் அவர் இறந்து விட்டதாகவும் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. வடகொரியா ஊடகங்கள் இதை பற்றி செய்தி கூறவில்லை. அந்நாட்டு அரசும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார் கிம் ஜாங் உன்.

தொழிற்சாலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஊடகங்கள் வெளியிட்டது. பலரும் புகைப்படங்களை வைத்து பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். இந்நிலையில் வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என உலக நாடுகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா உருவான சர்ச்சை- அதிபர் ட்ரம்பிற்கு எதிரான கருத்தை வெளியிட்ட அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்
கிம் ஜான் உனின் 21 நாட்களுக்கு புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு, அவரின் பற்கள், இமை, கண்கள், கன்னம் கூட வேறு மாதிரி இருக்கிறது. இது உண்மையில் கிம் ஜாங் உன் இல்லை என்கிறார்கள்.

சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக செயல்படும் ஜெனிபர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 1ம் தேதி கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் என குறிப்பிட்டு தலைமுடி, பல், காது மற்றும் அவரது சகோதரி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சிலரும் இதே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். கிம் ஜாங் உன் தனக்கு என்று பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை வைத்து இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தன்னை போலவே இருக்கும் உடல் இரட்டையரை அவர் வெளியே அனுப்புவார்.
வட கொரிய அதிபர் கிம்மிற்கு உள்நாட்டிலேயே பல எதிரிகள் இருக்கக் கூடும் என்றும் இதன் காரணமாக தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க தன்னைப் போன்றே தோற்றமளிக்கும் நபரை பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து வடகொரியா ஊடகங்கள் எந்த விளக்கமும் அளிக்காததும் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: