

பிறவி ஊனமாய் பிறப்பர் -ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பிராமணர்களுக்குத் தானமளிப்பவன் சொர்க்க லோகத்தை அடைவான் “அக்னியே! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானமளிக்காத எல்லாப் பகைவர்களையும் மண்பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல் நாசப்படுத்தவும்”(ரிக் வேதம், மண்டலம் 1 :36:16)
ரிக் வேதம் முதலாம் மண்டலத்தில் உள்ள இந்த மந்திரம்தான் “தானம்” என்பதின் மூலம்!
இந்த நூலின் மூலமாக “தானம்” வேதகாலத்திலிருந்து கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
சனாதன வேதியர்கள் ஸ்வர்ண தானம் (தங்கம்), ஷேத்திர தானம் (நிலம்),கோ தானம் (பசு), மகிஷா தானம் (எருமை), அஸ்வ தானம்(குதிரை), கஜ தானம் (யானை), பார்யா தானம் (மனைவி), கன்னியா தானம் (பெண்) எனும் தானங்களைப் பெற்று வந்ததை வேத, இதிகாச,புராண,சாஸ்திர,ஸ்ருதி, தர்ம, உபநிடதம் வேதாந்தம், ஆமகம் போன்ற பல நூல்களில் அறிய முடிகிறது.இவை தவிர ஆஜ்யதானம், உதகபாத்ர தானம்,தில தானம், தீப தானம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
வேத வைதீக சனாதனத்தில் ‘தானம்’ என்றாலே பிராமணர்களுக்கு பிற வர்ணத்தார்கள் தானம் வழங்குவதுதான்.
அவர்ணர்கள்(வர்ணம் இல்லாதவர்கள்- இழி பிறப்பாளர்கள் பஞ்சமர்கள் சண்டாளர்கள் etc) மனிதர்களே அல்ல,அவர்களுக்கு தானம் வழங்குதல் பெரிய பாவம்.
“வேதங்களை நன்கு ஓதி உணர்ந்தவர்களாகவும்,மனைவி மக்களோடு கிருஹஸ்தர்களாக இருக்கின்ற பிராமணர்களுக்குத் தானமளிப்பவன் சொர்க்க லோகத்தை அடைவான்”(மனுதர்மம் 11:6)
மனு தர்மம் முதல் மற்ற தர்ம சாஸ்திர நூல்களும் ( நாரத ஸ்ருமிதி,பராஸரர் ஸ்ருமிதி, யாக்ஞவல்கியர் ஸ்ருமிதி) பிராமணர்களுக்கு தானம் வழங்குவதை மட்டுமே வலியுறுத்துகின்றன.அப்படி வழங்காதவர்களுக்கான தண்டனைகளையும் அந்த தர்ம-நீதி-நூல்கள்? வழங்குகின்றன.
“தானம் வாங்குதற்கு உரிய உத்தம பாத்திரமாவார் வேதாகமங்களையும் சிவபுராணங்களையும் ஓதி உணர்ந்தவர்களாய், பாவங்களை முற்றக் கடிந்தவர்களாய், சந்தியாவந்தனம் சிவபூசை முதலிய கருமங்களைத் தவறாமல் விதிப்படி சிரத்தையோடு செய்பவர்களாய், இல்லறத்தில் வாழ்பவர்களாய் வறியவர்களாய் உள்ள பிராமணர்கள்.இவர்களல்லாத பிறருக்குத் தானஞ்செய்தவர், பத்து பிறப்பு ஓந்தியாயும்(நொண்டி அல்லது ஊனம்), மூன்று பிறப்புக் கழுதையாயும், இரண்டுப்பிறப்பு தவளையாயும், ஒரு பிறப்பு சண்டாளராயும்,பின் சூத்திரராயும், வைசியராயும்,அரசராயும்,பிராமணராயும் பிறந்து வறுமையினாலும், நோயினாலும் வருந்தி உழலுவர். ஆதலால் உத்தம பாத்திரமாகிய பிராமணருக்கே தானஞ்செய்தல் வேண்டும்”(சிவாலய தரிசன விதி நூலில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்)
தானம் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப
பட வேண்டியது என்பதும், பிராமணர்கள் தானம் வாங்குவதில் குறியாக இருந்தார்கள் என்பதும் இதன் மூலம் அறிய முடிகிறது. அசோகர்,சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் தொடங்கி தானம் வழங்கியே கஜானா காலியான சத்ரபதி சிவாஜி வரை, பிராமணர்களுக்கு ஸ்வர்ணம், பூதானமான பிரமதேயம், தேவதானம், தெய்வேந்திரி, இறை நிலங்களை அளித்ததை கல்வெட்டுக்கள் செப்புப் பட்டயங்கள் ஏடுகள் மோடி ஆவணங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
தானம் பற்றிய குறிப்புகளை இராமயண மகாபாரத இதிகாசங்களிலும் 18 புராணங்களிலும், உபநிடத, சாஸ்திர தர்ம நூல்கள், வேதங்கள்,ஆகம நூல்களிலும், வைதீக சனாதன நூல்களிலும் வாசிக்கலாம்.
வைதீகர்களுக்கு தானம் வழங்கினால்தான் புண்ணியம் கிடைக்கும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?!
இணைப்பு: பிண்ணூட்டப் பகுதியில் சிவாலய தரிசன விதி நூலின் பகுதி
1 கருத்து:
எதே தவறான எண்ணம் கொண்ட நபர்களால் சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
கருத்துரையிடுக