திங்கள், 4 மே, 2020

புலிகளின் தோல்வியை மறைக்க கலைஞர் தேவைப்படுகிறார்!

Kanimozhi MV : 11 வருடங்களுக்கு முன் அனைத்து திராவிடர் இயக்கங்களில்
உள்ளோரும் உணர்வு ரீதியாக புலிகளோடு இணைந்திருந்தவர்கள் தாம்
அதெப்படி இந்த 11 வருடத்திற்குள் என்னளவில் நான் அந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறினேன் என்பது எனக்கே வியப்பளிக்கும்
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வரும்போது நான் பெங்களூரில் வேலையில் இருந்தேன் ; கண்கள் கலங்கியது
பிரபாகரன் வந்துவிடுவார் எனப் பலர் என்னைப்போல நம்பிக்கொண்டிருந்தனர்
ஆனால் இப்போது யாராவது வந்து பிரபாகரன் வந்து விடுவார் என்றால்
“அவர்களை நக்கலாக பார்க்கும் பார்வை வாய்த்திருக்கிறது”
கலங்கிய கண்களிலிருந்து நக்கல் பார்வை எப்படி உருவானது ?
ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கலைஞர் எதிர்ப்பு எனக்கு அவர்களிடம் பிடிக்கவில்லை
கலைஞர் திமுக எதிர்ப்பில் தொடங்கியவர்கள் அங்கேயே நின்றருந்தால் கூட தலைகீழ் மாற்றம் என்னுள் ஏற்பட்டிருக்காது
அங்கிருந்து பெரியாரை நோக்கி புறப்பட்டார்கள்
அதில் இருந்து திராவிடர் இயக்கங்கள் நோக்கி வந்தது
அப்போது தான் ஒரு செய்தி மரமண்டையில் உரைத்தது
இவர்கள் கலைஞர் எதிர்ப்பை பேசுவதே அங்கிருந்து பயணித்து பெரியார் திராவிடம் என வரத்தான்

அதற்கு முதல் கட்டத்திலேயே அவர்களை தடுக்க நாம் தவறவிட்டோம்
அவர்களுக்கு மேடை போட்டு பேச சில திராவிடர் இயக்கம் அனுமதித்ததின் விளைவே இன்று பலர்
வளர்ந்து நிற்பதற்கு காரணம்
அங்கிருந்து அவர்கள் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினேன்
அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குள் உள்ள புதிதாக சேர்ந்த இளைஞர்கள் மொழியுணர்வை வேண்டிய அளவிற்கு பெற்றிருக்காதவர்களை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்
அது என்ன மொழியுணர்வை வேண்டிய அளவிற்கு பெறாதவர்கள் ?
தந்தை பெரியார் எழுப்பிய மொழியுணர்வு போராட்டம் என்பது ஆதிக்கத்தை எதிர்த்து
ஆனால் மொழியை ஒரு பயன்பாட்டுக்கருவி என்ற அளவில் அதை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவே , உணர்ச்சிவயப்படாத தன்மையே அவர் மொழியுணர்வு
ஆனால் அது ஒரு மெல்லியக்கோடு
கோட்டிற்கு இந்தப்பக்கம் சென்றுவிட்டால் நாம் வெறியர்களாகி விடுவோம்
சரியாக பெரியாரை உள்வாங்கியவர்கள் வெறியாக அதை தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டார்கள்
ஆக , இப்படி அல்லாத அரைவேக்காடுகள் பல அங்கே போயின
மற்றொரு செய்தி என்னை உறுத்தியது
அவர்கள் திராவிட இயக்க கட்டமைப்பை உடைக்க நம்முடைய அடையாளங்களை திருடுதுவது;
முதலில் கருப்புச்சட்டை அடையாளம்
திராவிடம் பெரியாரை தூற்றிக்கொண்டு அதன் அடையாளமாக உள்ள கருப்புச்சட்டை போட்டுக்கொள்வது
இங்கே விளம்பரங்களில் நீங்கள் பார்த்திருப்கீர்கள் ஒரே நிறத்தில் ஒரு பொருளை மிமிக் செய்து முதலில் வந்த பொருளை பற்றிய குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்
அதே தான் இன்று நடக்கிறது
புதிதாக வரும் தலைமுறைகள் கருப்புச்சட்டை போட்டவர்கள் பெரியாரையும் பேசுவார்கள் திராவிடத்தையும் எதிர்ப்பார்கள் நாட்டார் தெய்வங்களையும் வணங்குவார்கள் போல எனக் குழப்பும் மனநிலை
அந்த குழந்தைக்கு தெளிவு ஏற்பட்டு அரசியல் புரிவதற்குள் உணர்வு ரீதியாக இந்த போலிகளிடம் சிக்கிக்கொள்வார்கள்
இதை எல்லாம் கவனிக்கும் போது தான் , விடுதலைப்புலிகளின் மறுபக்கத்தையும் படிக்கத்தொடங்கினேன்
பெரியாரின் மறுபக்கத்தை எதிரிகள் எழுதும் போது துணிவோடு எதிர்க்கொண்ட நாம் பிரபாகரனின் மறுபக்கம் புலிகளின் தவறுகள் என எதையும் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? என்ற கேள்வி வந்தது
ஏன் என்றால் அவரை புனித சிறையில் பெரியாரியத்திற்கு எதிராக வைத்தவர்கள் நாமே
அங்கே தவறுகளும் உள்ளது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தான் நமக்கு இல்லை
இந்த திடிர் தமிழ்த்தேசியவாதிகள் செயல்களும் விடுதலைப்புலிகளின் மறுபக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக் கொண்டிருந்தது
அதைத் தாண்டி சிந்திக்க பழகினேன்
அப்போது தான் நவம்பர் 26 ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு நடத்திய தந்தை பெரியாரின் போராட்டத்தை பலர் பிரபாகரன் பிறந்த நாள் என்ற அளவில் சுருக்கிவைத்திருப்பது உரைத்தது
தவறாயிற்றே என்று உணரத்தொடங்கினேன்
அதே நேரத்தில் ஈழத்தமிழர்கள் அயல்நாடுகளில் சீமான் , மணியரசன் , திருமுருகன் வகையறாக களுக்கு வழங்கும் பணம் , அவர்களை தூக்கிப்பிடிப்பது எதற்கு என ஆராயத்தொடங்கினேன்
பலர் சீமான் முதல்வராக வருவார் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்
அவர்களிடம் நான் “என் மண்ணின் முதலமைச்சரை தேர்வு செய்ய நீங்கள் யார் “ என்றே கேட்டேன்
அதன் பின்னால் உள்ள அரசியலும் , இவர்கள் சைவ மத வெறியும் அதற்கான கருவியாக தமிழ்நாட்டை மாற்ற துடிப்பதும் கடும் கோபத்தை வரவைத்தது
உங்கள் மண்ணில் உங்கள் அரசியலுக்கு தார்மீக ஆதரவு அதுவும் உங்கள் எண்ணப்படியே அளித்தவர்கள்
ஆனால் எங்கள் மண்ணில் எந்த இயக்கத்தால் தார்மீக ஆதரவு சாத்தியப்பட்டதோ அதை. ஒழிக்க நீங்கள் பணம் தருவீர்களா என்ற கேள்வி கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த ஈழத்தை துடைத்தெறிந்தது;

இதில் புலிகளின் தோல்வியை மறைக்க அவர்களுக்கு கலைஞர் தேவைப்படுகிறார் என்ற அரசியலையும் புரிந்துக்கொண்டேன்
இப்படி படிப்படியாக என் மனது தெளிவடைந்து தமிழ்நாட்டு உரிமை தான் முக்கியம் என்று கருதும் நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறி போய்க்கொண்டிருந்தன இனியாவது விழிப்போமோ?!

2 கருத்துகள்:

விசு சொன்னது…

//இனியாவது விழிப்போமோ?!//

எனக்கு என்னமோ விழிப்போம் என்ற நம்பிக்கை இல்லை! இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்!

பெயரில்லா சொன்னது…

Well said Kanimozhi, கலைஞர் தன்னை எதிர்த்த யாரையும் இல்லாமல் செய்யவில்லை, விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர் முதல் வியந்து பார்க்க வந்த தொண்டன் வரை அரவணைத்தார். எதிர்கட்சியினரை எதிரியாய் பார்க்கவில்லை. துரோகம் செய்தவர்களையும் மன்னித்தார் அழித்தொழிக்கவில்லை.