செவ்வாய், 5 மே, 2020

போராளி இயக்கங்களில் ஆசிரியர் அடையாளங்காட்டியது . அப்படி என்றால் அது என்ன?

பாலாஜி பகுத்தறிவு  :  போராளி இயக்கங்களில் விடுதலைப்புலிகள் இயக்கம்தான் சரியான இயக்கம் என ஆசிரியர் அடையாளங்காட்டியது தவறா?
போராளி இயக்கங்களின் சரியான இயக்கம் பிழையான இயக்கம் என்பதை அந்த மக்கள் அல்லவா தீர்மானிக்கவேண்டும்?
அந்த மக்களுக்கும் கூட அதை தீர்மானிக்கும் சுதந்திரத்தை உரிமையை அந்த இயக்கங்கள் வழங்கி இருக்க வேண்டும் அல்லவா?
போராளிஇயக்கங்களின் சரியான இயக்கம் பிழையான இயக்கம் என்பதற்கு என்ன அளவீடு இருக்கிறது?
ஈழ விடுதலையை நோக்கி நகரும் எல்லா இயக்கங்களும் விடுதலை இயக்கங்கள்தானே?
ஒவ்வொரு இயக்கத்திற்கும் பலவித கருத்து  வேறு பாடுகள் இருப்பது சரிதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?
 விடுதளைக்காக போராடும் மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமையை மறுக்கும் இயக்கத்தை எப்படி  ஒரு விடுதலை இயக்கம் என்று கூற முடியும்?
போராடும் மக்களை மட்டுமல்லாமல் போராடும் சக இயக்கங்களையும்கூட போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்திய இயக்கத்தை எப்படி ஒரு விடுதலை இயக்கம் என்று கூற முடியும்?
போராடும் இயக்கங்களின் போராளிகளை  ஈவு இரக்கம் இன்றி கொன்றொழித்த இயக்கத்தை ஒரு மோசமான பாசிச இயக்கம் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?
ஒரு சமுகத்தில் கற்றோர் , கேள்வி கேட்போர் . எல்லாம் உயிரோடு இருக்க கூடாது என்ற திட்டத்தில் இயங்கிய ஒரு பாசிச வெறியர்களை இன்னும் ஒரு விடுதலை இயக்கம் என்று கூறுவது .. அதுவும் பெரியார் இயக்கங்களே கூறுவது கடைந்து எடுத்த அயோக்கியதனம் அல்லவா?

 எல்லாவற்றிலும் பார்க்க முக்கியமான ஓர் விடயம் உள்ளது.
ஈழ போராட்ட ஆரம்ப காலங்களில் எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களின் செல்ல பிள்ளைகளாகத்தான் இருந்தனர் .
எந்த வீட்டுக்கும் எந்த இயக்கத்து பிள்ளையும் அல்லது பொடியனும் செல்லலாம் தேநீர் அருந்தலாம் . உணவு உண்ணலாம் .
அப்படி எந்த ஒரு இயக்க பொடியங்களும் ( அப்படித்தான் அவர்கள் செல்லமாக மக்களால் அழைக்கக பட்டனர்) ஒரு வீட்டிற்கு வந்து விட்டு போயிருந்தால் அதைபற்றி அயலவர்களோடு அந்த   செய்திகளை பரிமாறுவது ஒரு சமுக தொடர்பாடலாக இருந்தது .
மக்களை அதிக அளவில் போராட்டத்தின் பால் ஈர்ப்பதற்கும் அவர்களின் கடமைகளை உணர்த்தவும் அவை பயன்பட்டது.
எந்த ஒரு கட்டத்திலும் மக்கள் எந்த ஒரு இயக்கத்தையும் தீய இயக்கம் நல்ல இயக்கம் என்று கருதவே இல்லை.
இயக்கங்களுக்கு இடையே அபோது இருந்த பெரிய வேறுபாடு என்பது அந்தந்த இயக்கங்கள் உருவான பகுதியை மற்றும்  மாக்சியம் சார்ந்ததாகவே இருந்தது .
ஈ பி ஆர் எல் எப் . ஈரோஸ் போன்றவை மார்க்சிய கோட்பாட்டை முன் வைத்தது.
பிளாட் பெரும்பாலும் தமிழர் விடுதலை கூட்டணியின் பின்புலத்தில் வந்ததாக கருதப்பட்டது.
புலிகள் இயக்கம் வல்வெட்டி துறை சார்ந்ததாக இருந்தது.
டெலோ இயக்கம் எல்லா தரப்பினரையும் அதிக அளவு கொண்டிருந்தது .
 அண்ணன் ஒரு இயக்கம் தம்பி ஒரு இயக்கம் என்பது  மிக மிக இயல்பான ஒரு விடயமாக இருந்தது.
பேச்சு வழக்கில் கூட மூத்தவன் ஈரோஸ் இளையவன் டெலோ அவன் மச்சான் புலி என்றெல்லாம் பேசுவது மிக சாதாரண விடயமாகும்..
அந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக இலங்கை அரசை கதி கலங்க அடித்து கொண்டிருந்தது.
அவர்களின் தாக்குதல் விபரங்களை கூறுவது என்றால் அதற்கென்றே தனி கட்டுரை எழுதவேண்டும்.
முறையான ஆயுத வசதியோ ஆட்பலமோ இல்லாத இலங்கை அரசு தோல்வியை நோக்கி ஜெட் வேகத்தில் பயணித்தது.
ஈழ விடுதலை என்பது மிக மிக நிச்சயாமான ஒரு காலக்கட்டம் அது!
உலக நாடுகள் முழுவதும் ஈழ சுதந்திர தேசத்தை வரவேற்க காத்து கொண்டுருந்தன என்றால் மிகை இல்லை.
அன்றய உலக ஊடங்களை பார்த்தல் இந்த உண்மை தெரியும்.
எல்லோரும் விடுதலையை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தவேளை இருவர் மட்டும் விடுதலைவை விட அதற்கு யார் சொந்தக்காரர்கள் என்ற சிந்தனையில் இருந்தனர்.
ஒருவர் எம்ஜியார் மற்றொருவர் பிரபாகரன்.
கலைஞருக்கு இதில் எந்த புகழும் வந்து விடக்கூடாது என்று எம்ஜியாரும்.
நான் மட்டுமே ஈழத்தின் ஆட்சி தலைவனாக இருக்கவேண்டும் என்று பிரபாகரனும் எண்ணினார்கள்.
இந்த இரு ...  மேதாவிகளின்  சிந்தனையில் இருந்து தொடங்கியது  ஈழத்தின் தோல்விப்படலம்
 முள்ளி வாய்க்காலில் வந்து முடிந்தது.      

கருத்துகள் இல்லை: