செவ்வாய், 17 நவம்பர், 2020
லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. மத்திய அரசு . RBI
maalaimalar : மத்திய அரசு எடுத்த நடவடிக்கை அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியில் நஷ்டம் அதிகரித்து வருவதால் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வங்கியின் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. இதன் அடிப்படையில் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக