செவ்வாய், 17 நவம்பர், 2020

திமுக அணியில் தேமுதிகவுக்கு 8 சீட்? பீகார் எபெக்ட்டால் காங். கோட்டாவில் செம 'வெட்டு'

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த அணியில் இருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. இருந்தபோதும் அந்த கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக தயாராக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும்; அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் குறைவான இடங்களையே ஒதுக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதையும் திமுக வலியுறுத்துகிறது. பீகார் தந்த பாடம்... கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தூக்கி கொடுத்துவிட்டு ஆட்சியை கோட்டைவிட்ட கதை இனியும் நடக்கக் கூடாது என்பதிலும் திமுக உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே திமுக அனுபவித்த துயரத்தை இப்போது பீகாரில்

வெற்றிக்கு அருகில் உள்ள தொகுதிகள் இதனால் காங்கிரஸுக்கு அதன் வெற்றி வாய்ப்பு ஏறத்தாழ உறுதி என்கிற தொகுதிகளை மட்டுமே கொடுப்பது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளை காங்கிரஸ் கடந்த காலங்களைப் போல கேட்டு வருகிறது. ஆனால் திமுகவோ இம்முறை நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளில் எதில் காங்கிரஸ் கண்டிப்பாக ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என அலசுகிறது. இதனடிப்படையில் நிலக்கோட்டையை மட்டும் கொடுத்தால் போதும் என நினைக்கிறது திமுக.


தேமுதிகவுக்கு 8 சீட்? இந்த பார்முலாவின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்களே மிக மிக அதிகம் என்கிற நிலை உருவாகிறது. இதனால் காங்கிரஸுக்கான தொகுதிகளில் இன்னும் கொஞ்சம் குறைத்துவிட்டு தேமுதிகவை உள்ளே இழுக்கலாம் என்பதும் திமுகவின் ப்ளான். தேமுதிகவுக்கு மிக அதிகபட்சம் 8 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் எனவும் திமுக கணக்குப் போட்டு வைத்திருக்கிறது.

உதயசூரியன் சின்னம் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது திமுகவின் முதல் திட்டமாக இருந்தது. ஆனால் கூட்டணி கட்சிகள் ஆளுக்கொரு திசையில் வெளியேறிவிடுவார்கள் என்பதால் இந்த 200 தொகுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலினே அறிக்கை வெளியிட்டு சமாதானப்படுத்தி இருந்தார். தற்போதைய நிலையில் திமுகவின் இடங்கள் உட்பட மொத்தம் 180 முதல் 185 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிட வாய்ப்புள்ளது.


தேமுதிகவின் நிலை என்னவாகும்? திமுகவின் இந்த வியூகங்களை தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு தேர்தலையும் போல தேமுதிகவும் இழுபறியாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு ஒருகருத்து சொன்னால் சீட் பேரம் அதிகமாகும் என்கிற பாச்சாவெல்லாம் இனி பலிக்காது என்பதை தேமுதிக உணராமல் இருக்கிறது. இப்படி தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவும் அவரது மகன் விஜயபிரபாகரனும் பேசிக் கொண்டிருந்தால் எந்த கூட்டணியிலும் இந்த முறை இடம் கிடைக்காமல் திண்டாடத்தான் வேண்டும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

 

கருத்துகள் இல்லை: