திங்கள், 16 நவம்பர், 2020

கல்வி இடை நிற்றலில் ஜா'தீயத்தின் பங்கு!.. This subconscious induced fear is துடைக்கத் துடைக்க படியும் புகை..

This subconscious induced fear is துடைக்கத் துடைக்க கண்ணாடியில் படியும் நீராவி புகைக்கு ஒப்பானது.


      

 

 

 

 

 

 

 

 

 APrabhakar TheKa : · கல்வி இடை நிற்றலில் ஜா'தீயத்தின் பங்கு! கீழே உள்ள பட்டியலை கூர்ந்து கவனிச்சா ஒன்று புலப்படும். மேலிருந்து கீழிறங்க படிப்பை பாதியில் விட்டுவிட்டு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். தமிழகத்தில் கொஞ்சம் குறைச்சல், ஏனா இருக்கும் யோசிங்க! ஆனா, இதில் அந்த பிரிவு மொத்த மாணவர்களின் சேர்ப்பு பொருட்டு தரவு பிரச்சினை புள்ளியல் சார்ந்து bias கொடுக்கலாம் இருப்பினும் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து அதுவும் ஐஐடி போன்ற பெரும் கல்விச்சாலைகளில் சேர்ந்து பாதியில் விட்டுச் செல்வது என்பது பெரும் சோகம். இதற்கு பின்னான காரணங்களை தோண்டித் துருவிப் பார்த்தால் பல காரணங்கள் குறிப்பாக சரிபடுத்திக் கொண்டு தொடர்ந்து படிப்பை மேற்கொள்ளத் தக்க காரணங்களாகத்தான் இருக்கக் கூடும்.

அரசுப் பள்ளியிலோ அல்லது பி, சி ஊர்ப்பாங்கான பள்ளிகளிலிருந்தோ செல்லும் மாணவர்களுக்கு கட்டணம் கட்டுவதிலிருந்து, மொழி, பிற 'எ' நகர குடும்ப பின்னணிகளிருந்து வரும் மாணவர்களுடன் கலப்பது வரைக்கும் வித விதமான பிரச்சினைகள் வரக் கூடும்.
பள்ளி இறுதிப் படிப்பிலும், நுழைவுத் தேர்விலும் மிக நன்றாக செய்த அந்த பி, சி குடும்ப பின்னணி மாணாக்கர்கள் இது போன்ற நிறுவனங்களில் நிலவும் தன் கண்களுக்கு புலப்படாத தன்னை மிரட்சியுறச் செய்யும் அரசியல் அதுவும் பொருளாதார, ஜாதி, மத அடிப்படையில் ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்தால், அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளோட இதுவும் சேர்ந்து பிரச்சினையை அதிகப்படுத்துவது போல ஆகாதா? அதுவும் அந்த மிரட்சியை தணித்து அரவணைத்துச் செல்லும் ஆசிரியர்களே அந்நியப் படுத்திக் கொள்ளும் பீடத்தில் தங்களை அமர்த்திக் கொண்டால் யாரிடம் இந்த மனநிலையில் உள்ளவர்கள் செல்வார்கள்.
சாப்பிடும் இடத்தில், கை கழுவுமிடத்தில், பகிர்ந்து கொள்ளும் பெஞ்சில், தங்கும் விடுதியில் என்று பிரச்சினைகள் துரத்திக் கொண்டே வந்தால் அந்த பிள்ளைகள் எப்படித்தான் தங்களது நாட்களை அந்த சூழலில் கடத்துவார்கள்?
இங்கே பல பேர் இது வேறு யாரோட குழந்தைகளுக்கோ நடக்கிறது என்று கருதி கடந்து போகிறார்கள். நாளை உங்களது குழந்தையும் "மிக நன்றாக படித்து" தான் என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்று கேட்டு இது போன்ற அரசு நிதி செய்து நடத்தும் கல்வி நிறுவனங்களுக்குள் அனுப்பி வைக்கும் பொழுது நீங்களும் உங்கள் குழந்தையோட சேர்ந்து சமூக ப்ரக்ஞையுற்று அன்று வயதிற்கு வருவீர்கள்.
அன்று, இன்றைய •பாத்திமா, டெல்லிக்கு எம். டி படிக்கச் சென்ற சர்வணனின் பெற்றோர்கள் போல கதைகளை கேட்டு கதறும் போது, ஓ! இவ்வளவு நடக்கிறதா என்று தெரிய வரும்.
ஆனால், அன்றும் இது நம்மில் பல பேருக்கு சம்பந்தமில்லாததாவே படும். ஆனால், உண்மை என்னவோ நீங்களும் ஒரு நாள் அவர்களைப் போல உங்கள் பிள்ளைகள் அந்த இடத்தை நோக்கி நகரும் போது உணர வாய்ப்பு கிடைக்கும். அது வரைக்கும் நமக்கு இது எல்லாம் சம்பந்தமே இல்லாத விசயங்களாகத்தான் கடந்து போய் கொண்டிருப்போம்

கருத்துகள் இல்லை: