ரஷ்யா தனது ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மருந்தில் 92 சதவிகித செயல்திறன் இருப்பதாக அறிவித்தது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் மூலம் இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது
ஃபைசர் -பயோஎன்டெக் தடுப்பு மருந்து:
வெற்றி விகிதம்: உலகளாவிய கோவிட் -19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முன்னிலை வகித்து வந்த ஃபைசர் நிறுவனம், ஜெர்மன் பயோஎன்டெக் என்ற பான்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தின் பரிசோதனை முடிவுகளை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது தடுப்பூசி 95 சதவீதம் பயன்திறன் கொண்டைவையாக உள்ளது என்று தெரிவித்தது.
ஃபைசர் தரவுகளின்படி, ஜைடஸ் கேடிலா நிறுவனம் தனது பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து 1,048 மனிதர்களுக்குச் செலுத்தி மருத்துவப் பரிசோதனைகளின் முதலாவது, இரண்டாவது கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ள இருக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் ஆராய்ச்சி மையத்தில் இந்த மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
43,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய 3ம் கட்ட பரிசோதனையில், கோவிட் -19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 170 பேரில், 162 பேருக்கு போலி மருந்தின் மூலம் நேர்மறையான மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் அளித்திருந்தது(பிளேஸ்போ விளைவு), 8 நோயாளிகள் மட்டுமே இரண்டு டோஸ் தேவை ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது தடுப்பூசி 95 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
எப்போது கிடைக்கும்: நிறுவனம் நேற்று, தனது தடுப்பு மருந்தை, அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் முன்வைத்தது. எப்படியும், கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்பாகவே ஃபைசர் நிறுவனத்தின் BNT162b2 தடுப்பு மருந்துக்கு அமேரிக்கா மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் ஒப்புதல் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 50 மில்லியன் தடுப்பு மருந்து டோசை தயாரிப்பதாகவும், 2021 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் அளவுகளை உற்பத்தி செய்வதாகவும் ஃபைசர் கூறியது.
செயல்திறன்: இது செலுத்தப்பட்டவர்களுக்கு இதை தாங்குகின்ற தன்மை; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை ஆகியவை குறித்து மதிப்பிடப்பட்டது. குறிப்பாக, நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பு மருந்தின் செயல்திறன் 94 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பக்க விளைவுகள்: இதன் பக்க விளைவுகளின் தாக்கம் மிதமானது என ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது. தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களில், 2 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு சோர்வு ஏற்பட்டதாகவும் ( இரண்டாவது டோஸுக்குப் பிறகு 3.7 சதவீதமாக இருந்தது) மற்றும் 2 சதவீதத்தினருக்கு தலைவலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது .
விலை: ஒரு டோஸுக்கு $ 20 வசூலிக்கும் என்று கூறப்படுகிறது
Explained: How effective are the top Covid-19 vaccines, when will they be available
மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசி :
வெற்றி விகிதம்: ஃபைசர் நிறுவனம் பயன்படுத்திய அதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, தனது தடுப்பு மருந்தை தயாரித்தது. மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் இறுதி கட்டப் பரிசோதனைகளின் அடிப்படையில், தடுப்பு மருந்து 94.5 சதவீத செயல்திறனைக் கொண்டு விளங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. நோய்த் தொற்று காணப்பட்ட 95 பேருக்கு, இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் செயல்திறன் மதிப்பிடப்பட்டது.
செயல்திறன்: நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற அறிவியல் நாளிதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில், மாடர்னா தடுப்பு மருந்து, இளைஞர்களைப் போலவே வயதானவர்களிடம் பொருந்தக்கூடிய ஆன்டிபாடியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.
எப்போது கிடைக்கும் : அவசரக்கால மருந்துப் பயன்பாடு என்பதன் கீழ் தீவிர கொரோனா நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனது தடுப்பு மருந்தை வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கா மக்களுக்கு சுமார் 20 மில்லியன் டோஸ்களை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
பக்க விளைவுகள்: மாடர்னா நிறுவனம் எந்தவிதமான பாதுகாப்பு கவலைகளையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், மாடர்னா மருத்துவ பரிசோதனை தரவுகளை பகுப்பாய்வு நடத்திய Science எனும் சுயாதீன வாரியத்தின் கூற்றுப்படி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 9.7 சதவீதம் பேருக்கு சோர்வு, 8.9 சதவீதம் பேருக்கு தசை வலி, 5.2 சதவீதம் பேருக்கு மூட்டு வலி, 4.5 சதவீதம் பேருக்கு தலைவலி போன்றவைகள் உணரப்பட்டதாக தெரிவித்தது
விலை: மாடர்னாவின் தடுப்பு மருந்து ஒரு நபருக்கு $ 37 (ரூ .2,750 க்கும் அதிகமாக) செலவாகும் என்று கூறியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி
முன்னணி தடுப்பூகளில் ஒன்றான AZD1222, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியதுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமம் பெற்றது.
இதன் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை தரவுகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் வெளியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயல்திறன்: AZD1222 அல்லது ChAdOx1 nCoV-19 தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. 56-69 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டியது என்று தெரிவிக்கப்பட்டது. “இளைங்ஞர்களை விட வயதானவர்களிடம் ChAdOx1 nCoV-19- ன் செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றன … அனைத்து வயதினருக்கும் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்து காணப்படுகிறது ”என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எப்போது கிடைக்கும்: இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களில் மருத்துவமனை சார்ந்து பரிசோதித்துப் பார்க்க பூனாவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜிஐ) அனுமதி அளித்தார்.
இந்த தடுப்பு மருந்து (இந்தியாவில் கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டது) 2021 பிப்ரவரி மாதத்திற்குள் முன் களப்பணியாளர், வயதானவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் ஏப்ரல் மாதத்திற்குள் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.
பக்க விளைவுகள்: இதுவரை, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் புகார்கள் எதுவும் பெரிதாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தலை வலி, சோர்வு, காய்ச்சல், தசை வலி போன்ற லேசான எதிர்வினைகள் காணப்படுவதாக லான்செட் ஆய்வு குறிப்பிடுகிறது,
விலை: 2 ° C முதல் 8 ° C என்ற குறைந்த வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பு மருந்துக்கு ரூ .500 முதல் ரூ .600 வரை செலவாகும் (ஒரு டோஸுக்கு) என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக