வியாழன், 19 நவம்பர், 2020

சரிந்து வரும் மதங்களின் செல்வாக்கு .. உலக ட்ரெண்டு இதுதான்... புள்ளிவிபரங்கள் காட்டும் உண்மை

Umar AH : மதவாதிகளின் வதந்தி**
ஐரோப்பிய கண்டத்தில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது எல்லோரும் இஸ்லாமை விரும்புகிறார்கள் பெண்கள் இஸ்லாமுக்கு மாறுகிறார்கள் , இந்து மதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொல்கிறார்கள் இது உண்மையா?
முதலில் u.k வில் இருந்து ஆராம்பிக்கலாம் u.k என்றால் இங்கிலாந்து , வேல்ஸ், ஸ்காட்லாந்து நாடுகளை அடக்கியது
1.கிருஸ்த்துவம் : 59.5%
2.மதங்களை பின்பற்றாதவர்கள்: 27.7%
3.இஸ்லாம் : 4.4%
4.இந்து மதம்: 1.3%
5.மற்றவை: 1.8%
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் யில் 2001 ஆம் ஆண்டு இஸ்லாம் 3% ஆக இருந்தது 2011 ஆம் ஆண்டு 4.8% ஆகியுள்ளது
இந்து மதம் 2001 யில் 1.1 ஆக இருந்தது 2011 யில் 1.5% ஆகியுள்ளது
மதங்களை வாழ்க்கையில் இருந்து எடுத்தவர்கள் 2001 யில் 14% ஆக இருந்தது 2011 யில் 25% ஆகியுள்ளது
http://en.m.wikipedia.org/.../Religion_in_the_United_Kingdom
_எது வேகமாக வளர்கிறது மனிதம் தானே._
அடுத்தது நார்வே நாட்டை பார்க்கலாம்
கிருஸ்த்துவ மதத்தில் இருப்பவர்கள் 77% பேர்
இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் 3.4 % பேர்
மற்றவை 20%
மதங்களில் இருப்பவர்கள் என்று சொன்னதற்கு காரணம் நார்வே நாட்டில் 22% பேர் மட்டும் தான் கடவுள் நம்பிக்கையாளர்கள் 44% பேர் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஆற்றல் இருக்கிறது என்று நம்புபவர்கள் 
(இவர்கள் நரக சொர்க கதைகளையும் அம்புலி மாமா வையும் நம்புவதில்லை என்பது குறிப்பிடதக்கது) 
29% பேர் கடவுள் மற்றும் எந்த ஆற்றலையும் நம்பாதா நாத்திகர்கள்
http://en.m.wikipedia.org/wiki/Religion_in_Norway
_இந்த நாட்டில் வளர்வது மனிதமா மார்க்கமா மனிதம் தானே_
*அடுத்தது நெதர்லாந்து நாட்டை பார்க்கலாம்*
2005 யில் எந்த மதத்தையும் சாராதவர்கள் 51.3%
ரோமன் கேதோலிக் : 24.6%
போரோட்டச்டேன்டிசம் : 14.8%
இஸ்லாம் 5.8%
இந்து மதம் 1.4%
புத்த மதம் 1.2%
2010யில் எடுத்த கணக்கெடுப்பு படி
எந்த மதத்தையும் சாராதவர்கள் அதே 51.3% ஆகவும் , கிருஸ்த்துவர்களும் , போரோ... அதே நிலையிலும் இருந்தார்கள்
இஸ்லாம் 5.8 யில் இருந்து 5 க்கு குறைந்து விட்டது , இந்து மதம் 1.4 யில் இருந்து 0.9% ஆக குறைந்து விட்டது
http://en.m.wikipedia.org/wiki/Religion_in_the_Netherlands
ஆக மொத்தத்தில் நெதர்லாந்து மனிதத்தை ஏற்றுக் கொண்ட நாடு.
சுவிடன் நாட்டில் 1970 களில் 95% பேர் தேவாலயங்களில் உறுப்பினர்களாக இருந்தார்கள் 2013 யில் 65% பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அதுவும் பெற்றோர்கள் இருந்தால் குடும்ப தொடர்ச்சியாகவே , ஞாயிற்று கிழமைகளில் வெறும் 4% பேர் மட்டுமே தேவாலாயங்களுக்கு செல்கிறார்களாம்
4% பேர் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள் வெறும் 18% பேர் மட்டுமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்
http://en.m.wikipedia.org/wiki/Religion_in_Sweden
_இங்கு என்ன வளர்ந்து வருகிறது மனிதம் தானே_
(ஐரோப்பா நாடுகளில் 90% இதே நிலை தான், மனிதமே வளர்கிறது)
அனியாத்துக்கு நாத்திக நாடுகளை எல்லாம் இஸ்லாம் வளர்கிறது இந்து மதம் பரவுது என்று பீலா விடுரானுங்க
பஞ்சத்தில் அடிப்பட்ட ஆப்ரிக்க கண்டத்தையும், கல்வி மறுக்கபடும் மத்திய ஆசிய நாடுகளிலும் , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்து வைத்து இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் தான் மதவாதம் நிலைத்து இருக்க முடியும் வருங்காலத்தில் இங்கும் மனிதம் வளர போவது நிச்சயம்


கருத்துகள் இல்லை: