nakkaeeran தாமோதரன் பிரகாஷ் : எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என திமுக சொல்லிவருகிறது. அதற்கு ஏற்றார்போல் திமுக இந்தமுறை பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக்-ஐ களமிறக்கி, அனைத்து தேர்தல் பணி வீயூகங்களையும் தயார் செய்து வந்திருக்கிறது. அதேபோல் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் எனும் பட்டியலையும் தயார் செய்துள்ளது ஐபேக்.
திமுக உட்பட கூட்டணி கட்சிகளின் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை கொடுத்துள்ளது. அதில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பதும், அதில் காங்கிரஸ் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடும் எனும் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ்-27, ம.தி.மு.க.-6, கம்யூனிஸ்ட்கள் தலா 6 மொத்தம்-12, விடுதலை சிறுத்தைகள்-6, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-3, இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்-3, இந்திய ஜனநாயக கட்சி-3, மனித நேய மக்கள் கட்சி-3 என கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தி.மு.க. நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் -171 என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக
மதுரவாயல், ராயபுரம், நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், உதகமண்டலம்,
வேடசந்தூர், திருச்சி (கிழக்கு), முசிறி, காட்டுமன்னார்கோவில், நன்னிலம்,
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, முதுகுளத்தூர்,
வைகுண்டம், நாங்குநேரி, விளவங்கோடு, கிள்ளியூர், அம்பத்தூர், மதுரை,
விளாத்திகுளம், வால்பாறை, ராதாபுரம், மைலாப்பூர், பூவிருந்தவல்லி மற்றும்
திருமயம் என 27 இடங்களை ஐபேக் கொடுத்துள்ள பட்டியலில் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக