thinathanthi: காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த 6 ஆயிரத்து 500 பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களில் பெருமளவிலானோர் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் இயக்கத்தினர் ஆவர். ஆப்கானிஸ்தானின் உள்விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி தாரிக் ஆரியன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஆப்கான் படைகளுக்கு எதிராக சமீபத்திய மோதல்களில் கொல்லப்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். அதில், ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்களில் அந்நாட்டு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ஆப்கான் மண்ணில் இயங்கி வந்த தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் 152 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக