புதன், 18 நவம்பர், 2020

சமச்சீர் கல்வித் திட்டம்.. முதல் எதிர்ப்பு குரல் பத்ம சேஷாத்ரியில் இருந்து வருகிறது.

Muralidharan Pசமச்சீர் கல்வித் திட்டம் வந்த கதை:
ஏழைக் குடும்ப மாணவர்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு கல்வி என்று இருந்த கல்வியை மாற்றி அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தை உருவாக்கினார் முதல்வர் கலைஞர்.
படிக்கும் புத்தகத்தில், மதிப்பெண்களில், தேர்வு முறையில், திருத்தும் முறையில் ஏற்றத் தாழ்வு இருந்த தமிழகத்தில் அனைவருக்கும் ஒரே கல்வி முறையை அமுல்படுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் ஏதோ தருமபுரியில் சிற்றூரில் இருக்கும் மாணவர்களுக்கும் ஒரே சமமான பாடதிட்டம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது சற்று சிக்கலான நிலைதான்.
அதை செவ்வனே செய்தது சமச்சீர் கல்வித் திட்டம்.
எதிர்ப்பு வராமலா இருக்கும்?
வேறு வழியின்றி அனைத்து பள்ளிகளிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு கொடுக்கிறது.
2011ல் ஆட்சியை இழக்கிறது திமுக.
மீண்டும் அதிமுக ஆட்சி. முதல் எதிர்ப்பு குரல் பத்ம சேஷாத்ரி பள்ளியில் இருந்து வருகிறது.
நிபுணர் குழுவில் அந்த பள்ளியும் இருக்கிறதே? குரல் வராதா?
அம்மையார் ஆட்சிக்கு வந்த முதல் வேலையாய் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் ஆணை வருகிறது. 
சட்டமன்றத்தில் அந்த கல்வி முறையை உருவாக்கிய அமைச்சர் என்ற வகையில் திரு. தங்கம் தென்னரசு அந்த திட்டம் ரத்து செய்ய வேண்டாம் என்று மணிக்கணக்கில் வாதிடுகின்றனர். கலைஞர் கொண்டு வந்த திட்டம், அதுவும் முன்னாள் அமைச்சர் சமூக நீதி கண்ணோட்டத்தில் பார்க்கும்படி கோருகிறார். எளிதில் ஒப்புக்கொள்ள அம்மையார் அவ்வளவு நல்லவரா?
 
திமுக உச்சநீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம் NCERTயை கருத்து கேட்கிறது. NCERTல் சில நல்ல நேர்மையான அதிகாரிகள் இருந்ததால்,
"இந்திய அளவில் மிகவும் சிறப்பான பாடதிட்டம் சமச்சீர் கல்வித் திட்டம்' என்று கருத்து கூறுகிறது NCERT. உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டம் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர உத்தரவு பிறப்பித்தது.
எந்த ஜெயலலிதா தங்கம் தென்னரசு பேசிய போது சிரித்துக் கொண்டே இருந்தாரோ, அதே ஜெயலலிதா சட்டசபையில் அவர் திருவாய் மலர்ந்து சமச்சீர் கல்வித் திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து அமுல்படுத்திட அதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
 
ஆகவே, ஜெயலலிதாவை வெளியே இருந்துகொண்டு ஒப்புக்கொள்ள வைத்தார் கலைஞர் பெருமகனார் என்றால் அது தான் நிஜம்.
முன்னாள் அமைச்சர்:திரு தங்கம் தென்னரசு, திராவிடம் 2.0 பேச்சிலிருந்து.
கல்வி முன்னேற்றத்திற்காக
வேறு என்ன செய்து கிழித்தது திமுக?
Muralidharan Pb

கருத்துகள் இல்லை: