Add caption |
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழகம் வரும்போது GoBackModi எனும் ஹேஷ்டேக் கடந்த காலங்களில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமித் ஷா வருகை குறித்து பல முன்னணி ஊடங்கங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. தினத்தந்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு. டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.
14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க் கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், நேற்று இரவு வரை போலீஸ் தரப்பில் இருந்து எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இருந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பா.ஜ.க.வினர் செய்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் அரசு விழாக்களிலும், பாஜகவினருடன் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வார் என்றும் அந்த செய்தி விவரிக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணியைத் தொடர்வது குறித்து கருத்து கேட்பு
அமித் ஷா வருகையை முன்னிட்டு அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது என இந்து தமிழ் திசை நாளிதழ் தெரிவிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா, அமித் ஷாவிடம் என்ன பேசுவது என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கருத்துகளை கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அமித் ஷா பங்கேற்கும் கலைவாணர் அரங்கக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக