Velmurugan P -//tamil.oneindia.com :
லண்டன்: ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி 2ம் கட்ட மருத்துவ
பரிசோதனைகளில் வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத்
தூண்டியுள்ளது,
இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு அதிக ஆபத்தில்
இருக்கும் மக்கள்தொகையில் பெரும் பகுதியான முதியவர்களை பாதுகாப்பதில்
சாத்தியமான பயன்களை ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிரூபித்துள்ளது.
தி லான்செட் மருத்துவ இதழில் முதற்கட்ட கண்டுபிடிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும்
பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால்
உருவாக்கப்பட்ட ChAdOx1 nCov-2019 (தொழில்நுட்ப பெயர்) தடுப்பூசி
பாதுகாப்பானது. நன்கு வேலை செய்கிறது. வயதானவர்களிடையே வலுவான நோயெதிர்ப்பு
சக்தியை உருவாக்குகிறது.
முக்கியமாக, "ChAdOx1 nCoV-19 தடுப்பூசி இளம் மற்றும் வயதுவந்தவர்களை விட
வயதானவர்களிடையே நன்கு வேலை செய்வதாக தோன்றுகிறது..."
ஒரு
டோஸுக்குப் பிறகு எல்லா வயதினருக்கும் இதேபோன்ற நோயெதிர்ப்புத் திறனை
உருவாக்குகிறது. இந்த தடுப்பூசியின் செயல்திறனை மேலும் மதிப்பீடு செய்வது
அனைத்து வயதினருக்கும் மற்றும் கொமொர்பிடிட்டி கொண்ட நபர்களுக்கும்
பரிசோதிக்கப்பட வேண்டும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் மகேஷ் ராமசாமி கூறுகையில், "வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனெனில் அவர்கள் கடுமையான நோய்க்கான ஆபத்து அதிகம். அத்துடன் அவர்கள் தான் தடுப்பூசிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்
இந்த ஆரம்ப கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மிகவும் சாதகமானது ஆகும்.
ஏனெனில் இந்த தடுப்பூசி தான் புனேவைச் சேர்ந்த தடுப்பூசி உற்பத்தி
நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவற்றால் நாட்டில் 3 ஆம் கட்ட மருத்துவ
பரிசோதனைகளில் பயன்படுத்தப்படுகினற்ன. சீரம் நிறுவனம் ஏற்கனவே இந்திய
மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) யிடமிருந்து அவசர உற்பத்தி
மற்றும் கையிருப்பு உரிமத்தின் கீழ் 4 கோடி டோஸ் தயாரித்துள்ளது, மேலும்
இந்த தடுப்பூசியைத்தான் இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக்கு பெரும் பகுதியை
வழங்கவுள்ளது
உடனடி தேவை
தி லான்செட் இதழின் கூற்றுப்படி 2வதுகட்ட பரிசோதனையில் ChAdOx1 nCoV-19
தடுப்பூசி முதியவர்கள் இளையவர்களை பாதுகாக்கிறது. எனவே 3வதுகட்ட சோதனைக்கு
பின்னர் கொரோனாவை விரட்ட ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி
நல்ல பலனை தரும் என்று நம்பலாம். ஏற்கனவே ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும்
மாடர்னா ஆகியவை 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளன.
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் நல்ல பலனை தருவதாக சொல்கிறார்கள்.
தற்போதைய நிலையில் 5.6 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால்
பாதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக ஒரு தடுப்பூசி கிடைக்க வேண்டியதுஅவசியம்
ஆகும். அதற்கான நம்பிக்கைகளை இந்த தடுப்பூசிகள் விதைத்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக