ஞாயிறு, 15 நவம்பர், 2020

அஜர்பைஜானுடன் மோதல்; ஆர்மீனியாவின் 2,317 வீரர்கள் பலி

.dailythanthi.com :p எரிவான், அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையே நாகர்னோ-காராபாக் பகுதி தொடர்புடைய மோதல் கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுபற்றி ஆர்மீனியா நாட்டுக்கான சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு பெண் அதிகாரி அலினா நிகோகோசியான் வெளியிட்ட தகவலில், 2,317 வீரர்கள் அஜர்பைஜான் நாட்டுடனான மோதலில் பலியாகி இருக்கின்றனர். அவர்களது உடல்களை எங்களுடைய தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்பொழுது, இரு நாடுகளின் மோதலால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும். 8 ஆயிரம் மக்கள் காயமடைந்து இருக்க கூடும் என கூறியுள்ளார். இந்த மோதலில் பொதுமக்களில் 143 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு விட்டு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். இதனால் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் எண்ணற்ற கலாசார தலங்கள் அழிந்து போயுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: