புதன், 22 மே, 2019

ஓட்டு எண்ணிக்கை பெரிய குளறுபடியில் முடிய வாய்ப்புள்ளது.. எண்ணி முடிந்த பின்தான் ஒப்புகை சீட்டு பரிசீலனை ?

Swathi K : நாளைக்கு நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை பெரிய குளறுபடியில் முடிய வாய்ப்புள்ளது..
"பாராளுமன்ற" தேர்தலில் முதல் முறையாக ஒப்புகை சீட்டு (VVPAT Receipt) எண்ணிக்கையை EVM மெஷின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு அது இரண்டும் ஒன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்யவேண்டும்.. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 EVM மெஷினில் இந்த ஒப்பீடு செய்யவேண்டும்.. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 30-40 EVM வரை இந்த சோதனை செய்யப்படும்..
இது நல்ல செய்தி.. இப்ப பிரச்சனைக்கு வருவோம்..
1. இந்த ஒப்பீட்டில் எண்ணிக்கை மாறுபட்டால்.. என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான வரைமுறை இதுவரை இல்லை.. எண்ணிக்கை மாறுபடும் போது.. அந்த சட்டசபைக்கு (not parliament) உட்பட்ட எல்லா இடங்களிலும் VVPAT Receipt எண்ணி அதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று 22 எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
2. தேர்தல் கமிசன் முதலில் EVMல் உள்ள எல்லா ஓட்டுக்களையும் எண்ணி முடித்த பின்பு தான் VVPAT Receipt எண்ணி சரிபார்க்கபடும் என்று பிடிவாதமாக இருக்கிறது.. ஆனால் எதிர்கட்சிகள் முதலில் VVPAT Receipt எண்ணி சரிபார்த்து விட்டு... அவை சரியாக இருந்தால் மட்டும் EVM ஓட்டை கணக்கிடவேண்டும்.. ஒரு வேளை இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தால்.. VVPAT Receipt மட்டுமே அந்த சட்டசபை தொகுதி முழுவதிற்கும் எண்ணி அதன் முடிவை அறிவிக்கவேண்டும்..

மேலே வைத்த கோரிக்கைகள் இரண்டுமே மிக சரியானவை.. இன்று இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கிறது... (வழக்கம் போல இதை பிஜேபியின் தேர்தல் ஆணையம் ஒத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்).. இந்த குறைந்த பட்ச கோரிக்கைக்கு கூட தேர்தல் ஆணையம் ஒத்துவரவில்லை என்றால் எதிர்கட்சிகள் மறுபடி இன்று உச்ச நீதிமன்றம் போக வாய்ப்பிருக்கிறது..
EVM ஓட்டும் VVPAT ஓட்டும் நிறைய இடங்களில் ஒத்துப்போகவில்லை என்ற செய்திகள் நாளை வர வாய்ப்பிருக்கிறது.. அந்த சூழலில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை..
எப்படியாவது மக்கள் போட்ட ஓட்டை எண்ணி உண்மையான முடிவை அறிவிக்க வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் முயற்சிக்கும்... ஏதாவது கோல்மால் செய்தாவது வெற்றி பெற மாட்டோமா என்ற ஆளும் கட்சியின் முயற்சிக்கும் நடுவில் நடக்கும் போராட்டம் தான் கடந்த இரண்டு நாள் போராட்டம்...
எப்படியோ.. மூன்றாம் அணி, நான்காம் அணி கதையெல்லாம் முடிந்து போச்சு.. இப்ப ஆட்டத்தில் இருப்பது இரண்டு அணிகள்..
Team A: UPA + Mamta, Mayawathi, Akilesh, Naidu, Arvind Kejriwal and Communist.
Team B: NDA + Chandrasekar Rao TRS + Navin's BJD + Jegan's YSR Congress (50:50)
இந்த இரண்டு அணிக்கான ஆட்டம் தான் நாளை பார்க்கப்போகிறோம்..
-

கருத்துகள் இல்லை: