
tamil.oneindia.com/authors/kalai-mathi
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி
பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வாக்குகள்
வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும்
542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி
நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று
வருகிறது.
அதேநேரத்தில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலை
வகித்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி
இரானி முன்னிலை வகிக்கிறார்.
அமேதி
தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவை சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் முன்னிலை வகித்து
வருகிறார்.<
காங்கிரஸ்
தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம்
வயநாட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ராகுல்காந்தி
12,76,945 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 12,76,945
வாக்குகள் பெற்ற ராகுல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றுள்ளார்.
காங்கிரசுக்கு பின்னடைவு
நாடு
முழுவதும் காங்கிரஸ் கட்சி 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை
வகிக்கிறது. இதரக்கட்சிகள் 100க்கும் மேற்பட்டஇடங்களில் முன்னிலை வகித்து
வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக