ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்... பட்டியல் வெளியானது!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் 'அ.தி.மு.க தொகுதி பங்கீடு' பட்டியல்... அ.தி.மு.க 1. வட சென்னை 2. மத்திய சென்னை 3. திருவள்ளூர் 4. காஞ்சிபுரம் 5. திருவண்ணாமலை 6. கிருஷ்ணகிரி 7. சேலம் 8. நாமக்கல் 9. ஈரோடு 10. திருப்பூர் 11. பொள்ளாச்சி 12. கரூர் 13. ராமநாதபுரம் 14. விருதுநகர் 15. தஞ்சாவூர் 16. தேனி 17. நாகப்பட்டினம் 18. மதுரை 19. கடலூர் 20. விழுப்புரம் 21. தூத்துக்குடி - சமத்துவ மக்கள் கட்சி பா.ஜ.க 1. கன்னியாகுமரி 2. தென்சென்னை 3. கோயமுத்தூர் 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. நீலகிரி 7. திருச்சி பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சி வேலூர் - புதிய நீதிக் கட்சி தென்காசி - புதிய தமிழகம் கட்சி பா.ம.க 1. தருமபுரி 2. அரக்கோணம் 3. ஸ்ரீபெரும்புதூர் 4. மயிலாடுதுறை 5. சிதம்பரம் தே.மு.தி.க 1. கள்ளக்குறிச்சி 2. ஆரணி த.மா.கா 1. திண்டுக்கல்
zeenews.india.com :
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்... பட்டியல் வெளியானது!
அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்காது என சொல்வதற்கு திருமாவளவன் யார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிக்கையில்...
தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்கு தேவையான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் எனவும், கூட்டணி குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்., அதிமுக-பாஜக கூட்டணி அமையாது என தெரிவித்துள்ளாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு... அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்காது என சொல்வதற்கு திருமாவளவன் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இந்த கேள்வி, அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க சாத்தியகூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
அதாவது., அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் இக்கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே தொகுதி பங்கீடு நடந்து முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் 'அ.தி.மு.க தொகுதி பங்கீடு' பட்டியல்...
அ.தி.மு.க 
  • 1. வட சென்னை
  • 2. மத்திய சென்னை
  • 3. திருவள்ளூர்
  • 4. காஞ்சிபுரம்
  • 5. திருவண்ணாமலை
  • 6. கிருஷ்ணகிரி
  • 7. சேலம்
  • 8. நாமக்கல்
  • 9. ஈரோடு
  • 10. திருப்பூர்
  • 11. பொள்ளாச்சி
  • 12. கரூர்
  • 13. ராமநாதபுரம்
  • 14. விருதுநகர்
  • 15. தஞ்சாவூர் 
  • 16. தேனி
  • 17. நாகப்பட்டினம்
  • 18. மதுரை
  • 19. கடலூர்
  • 20. விழுப்புரம்
  • 21. தூத்துக்குடி - சமத்துவ மக்கள் கட்சி
பா.ஜ.க
  • 1. கன்னியாகுமரி
  • 2. தென்சென்னை
  • 3. கோயமுத்தூர்
  • 4. சிவகங்கை
  • 5. திருநெல்வேலி
  • 6. நீலகிரி
  • 7. திருச்சி
  • பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சி
  • வேலூர் - புதிய நீதிக் கட்சி
  • தென்காசி - புதிய தமிழகம் கட்சி
பா.ம.க
  • 1. தருமபுரி
  • 2. அரக்கோணம்
  • 3. ஸ்ரீபெரும்புதூர்
  • 4. மயிலாடுதுறை
  • 5. சிதம்பரம்
தே.மு.தி.க
  • 1. கள்ளக்குறிச்சி
  • 2. ஆரணி
த.மா.கா
  • 1. திண்டுக்கல்
(மேல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பட்டியல், கட்சிகள் சார்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை)

கருத்துகள் இல்லை: