புதன், 13 பிப்ரவரி, 2019

அதிமுக விஜயகாந்த் கட்சிக்கு 4 சீட் மட்டுமே .. ராஜயசபா சீட் தரமுயாது ..

விஜயகாந்த் வசம் முடிவு கூட்டணிக் குழப்பம் tamiloneindia: இது மட்டும்தான்.. அதெல்லாம் கேட்கப்படாது.. மூச்.. கதவைச் சாத்திய அதிமுக.. அதிர்ச்சியில் தேமுதிக! சென்னை: ஜெயலலிதாவிடம் கூட அடித்துப் பேசி அலேக்காக லட்டு போல சீட்டுகளை வாங்கி வந்தார் விஜயகாந்த். ஆனால் தற்போது லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு சீட்டுக்காக கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் அவரது கட்சி.
ஆனால் இந்த ஒரு சீட் என்பது ராஜ்யசபா சீட்டாகும். என்ன குழப்புதா.. அதாங்க, லோக்சபா சீட்டோடு, ராஜ்யசபாவுக்கும் சேர்த்து துண்டு போட நினைத்தது தேமுதிக. ஆனால் முடியவே முடியாது என்று அதிமுக கண்டிஷனாக சொல்லி விட்டதாம்.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிக தற்போது பாஜகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதாம். ஏதாவது செய்து ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியாவது வாங்கிக் கொடுங்க என்று.
 கூட்டணிக் குழப்பம்
அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சி தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக என்று இப்போதைக்கு பேசப்பட்டு வருகிறது. இதில் பாமக கடைசி நேரத்தில் ஜகா வாங்கக் கூடும் என்ற பேச்சும் உள்ளதை மறுக்க முடியாது. கூட்டணி முடிவாகி விட்ட நிலையில் தொகுதிப் பங்கீட்டில் பிசியாக உள்ளனர்.

அதிமுக கண்டிப்பு இதில் பாமகவும், தேமுதிகவும் ஆளுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கேட்டுள்ளனராம். பாமக வாங்கப் போகும் ராஜ்யசபா சீட் யாருக்கு என்று தெரியவில்லை.
அதேசமயம், தேமுதிக தரப்பில் கேட்கும் ராஜ்யசபா சீட்டில் பிரேமலதா விஜயகாந்த் நிற்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக ஸாரி சொல்லி விட்டதாம்.
அதெல்லாம் கிடையாது லோக்சபா சீட் மட்டும்தான் தர முடியும். அதுவும் 4 தான். அதற்கு மேல் ஒரு சீட் கூட கிடையாது. ராஜ்யசபாவையெல்லாம் மறந்துடுங்க என்று கண்டிப்புடன் கூறி விட்டதாம் அதிமுக. இதனால் தேமுதிக தரப்பு அப்செட்டாகியுள்ளதாம்.

விஜயகாந்த் வசம் முடிவு விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்ததும் அவரிடம் நிலவரத்தைக் கூறி இறுதிக் கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளதாம். அவர் எடுக்கும் முடிவுக்கேற்ப தீர்மானிக்கவுள்ளனராம். இருப்பினும் கடைசி முயற்சியாக, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியாவது வாங்கித் தருமாறு பாஜக மூலம் மீண்டும் கேட்டுள்ளதாம் தேமுதிக.

அதிமுக தரப்பிலிருந்து இதுவரை இதற்குப் பதில் இல்லையாம். எப்படி இருந்தார் விஜயகாந்த்.. என்னா மாதிரி தொகுதிப் பங்கீட்டை முடித்தார்.. கடைசியில் அவரது கட்சிக்கு இப்படி ஒரு கஷ்டமா!.

கருத்துகள் இல்லை: