செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

இரான் .. அன்றும், இன்றும் .. பெண்ணுரிமையும் இஸ்லாமிய தீவிரவாதமும்


BBC : இரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பல மாற்றங்கள் அந்நாட்டில் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் வாழ்வில்.
ஒரு காலத்தில் இரான் பெண்கள் எந்த ஆடை கட்டுபாடும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1930ஆம் ஆண்டு அந்நாட்டின் அப்போதைய ஷா, பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வலுக்கட்டாயமாக தலைமறைப்பை நீக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆனால், இப்போது அவை அனைத்தும் கடந்த கால நினைவுகளாக மட்டும் மாறிவிட்டன.
_105589028_e856f49f-fc38-46e0-a653-dfb45efffcdc  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589028 e856f49f fc38 46e0 a653 dfb45efffcdc1980ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசு பெண்களுக்கு பலவிதமான ஆடை கட்டுபாடுகளை விதித்தது. குறிப்பாக அனைத்து பெண்களும் முகத்திரை அணிவதை கட்டாயமாக்கியது.
இரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள்? என்பதை சில புகைப்படங்கள் மூலம் விளக்குகிறோம்.
புரட்சிக்கு முன்
உயர்க்கல்வி: 1977ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பல பெண்கள் உயர்க்கல்வி படித்து இருக்கிறார்கள். அதற்கு பின் அந்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் பல படித்த பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
உடை கட்டுப்பாடு: இஸ்லாமிய புரட்சிக்கு முன் அந்நாட்டில் எந்த ஆடை கட்டுப்பாடும் இல்லை. மேற்கத்திய உடைகள் அணிவது சர்வசாதாரணமாக நடைமுறையாக இருந்திருக்கிறது. பெண்களும் கடைவீதிகளுக்கு தனியாக சென்று இருக்கிறார்கள்.
வார இறுதி கொண்டாட்டங்கள்: இஸ்லாமிய புரட்சிக்கு குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பெண்கள் வார இறுதியில் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.
பேராசிரியர் அஃப்சர், “இந்த சுற்றுலாக்கள் இரானிய பண்பாட்டின் ஒரு பகுதி. புரட்சிக்குப் பின்னும் இது மாறவில்லை. ஆனால், இப்போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து அமரும் போது, கவனமாகவும் , உரையாடலின் போது அதிக பிரக்ஞ்சைவுடனும் இருக்கிறார்கள்” என்கிறார்.
_105589024_5a04210e-d14b-4005-bac2-b1e4ddbb80f0  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589024 5a04210e d14b 4005 bac2 b1e4ddbb80f0
முடிதிருத்த நிலையம் 1977: பெண்கள் இருக்கும் ஒரு முடி திருத்த நிலையத்தில் ஓர் ஆண் சர்வ சாதரணமாக செல்லும் காட்சி. இப்போது அங்கு காண முடியாத காட்சியும் கூட. ஆனால், இப்போதும் இருபாலருக்காகவும் ரகசிய சலூன் இரானில் இயங்குவதாக கூறுகிறார் அஃப்சர்.
_105589025_993a30c3-dca4-494e-82d2-c7892d45087e  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589025 993a30c3 dca4 494e 82d2 c7892d45087e
ஷாவிடம் பேசும் வரும் பெண்: இந்த புகைப்படம் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. பாதுகாவலர்கள் சூழ இருக்கும் ஷா முஹம்மது ரீஷா பக்லவியிடம் ஒரு பெண் பேச வருகிறார்.”இந்த காலக்கட்டத்திலேயே ஷா அதிகம் வெறுக்கப்பட்டவராக இருந்தார்” என்கிறார் பேராசிரியர் அஃப்சர்.
_105589026_9cb16c5c-125d-4e94-b934-534dc49c0706  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589026 9cb16c5c 125d 4e94 b934 534dc49c0706
பனி படர்ந்த ஒரு நாளில்: ஒரு பெண் நம்பிக்கையுடன் 1976ஆம் ஆண்டு சாலையில் நடந்து செல்லும் காட்சி. அவரது காதணி, அவர் குடை பிடித்திருக்கும் பாங்கு எல்லாம் ஒரு காலத்தின் சாட்சியங்கள். இப்போது இதுமாதிரியான காட்சிகளை காண முடியாது என்கிறார் அஃப்சர்.
புரட்சிக்குப் பின்
_105589027_9e398644-cf21-4128-8416-c9fdd56d5580  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589027 9e398644 cf21 4128 8416 c9fdd56d5580
ஹிஜாப்புக்கு எதிராக: இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி பொறுப்புக்கு வந்தப் பின் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கினார். அதற்கு எதிராக பெண்கள் தினத்தன்று போராடும் பெண்கள்.
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்: புரட்சிகர மாணவர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளை 1979ஆம் ஆண்டு பிணை கைதிகளாக பிடித்து வைத்த சமயத்தில், தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்திய அமெரிக்க எதிர்ப்பி என்ணம் கொண்ட போராட்டக்காரர்கள்.
எண்ணெய்க்காக அமெரிக்காவும், பிரிட்டனும் இரானில் ஆதிக்கம் செலுத்த முயன்றன. இதன் காரணமாக இயல்பாகவே இரான் மக்களுக்கு அந்நாடுகள் மீது கோபம் அவநம்பிக்கை இருந்தது என்கிறார் பேராசிரியர் அஃப்சர்.
_105589029_09b99ba6-d6f7-4366-b410-dde1580244af  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589029 09b99ba6 d6f7 4366 b410 dde1580244af
வெள்ளிக்கிழமை தொழுகைகள்: “வெள்ளிக்கிழமை தொழுகைகள் இஸ்லாமிய ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. தாங்கள் இஸ்லாமிய ஆட்சியை எதிர்க்கவில்லை என்பதை காட்டுவதற்காக அவர்கள் இந்த தொழுகைகளில் பங்கேற்கிறார்கள்.” என்கிறார் அஃப்சர்.
ஆனால், அதே நேரம் இப்போது ஆண்களுக்கான் ஓர் இடமாக மாறிவிட்டது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
_105589031_299e668f-50f6-4c84-8aea-ae6abf3ed217  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589031 299e668f 50f6 4c84 8aea ae6abf3ed217
கேப்சியன் கடலில் பெண்கள்: 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது. பெண்கள் நீச்சல் உடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெண்கள் வாடகைக்கு படகுகளை எடுத்து நடுக் கடலுக்கு சென்று நீந்துகிறார்கள் என்கிறார் அஃப்சர்.
_105589032_d6cbc2b1-bbe6-4aa1-811e-ac0e636ebdee  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589032 d6cbc2b1 bbe6 4aa1 811e ac0e636ebdee
ஹிஜாபுக்கு ஆதரவாக: 2006ஆம் ஆண்டு ஹிஜாபுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பேரணி இது.
_105589033_fb7c8b98-f600-43f5-9469-849b5cf56721  இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? 105589033 fb7c8b98 f600 43f5 9469 849b5cf56721
 ஆண்கள் கால்பந்து போட்டியை காண தடையில்லை என்றாலும், மைதானங்கள் பெண்களை அனுமதிப்பதில்லை. இஸ்லாமிய புரட்சிக்கு முன் பெண்கள் சர்வசாதாரணமாக விளையாட்டு போட்டிகளை கண்டு வந்தனர்.

கருத்துகள் இல்லை: