வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாலைமலர் :சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைக்க அனுமதிக்கும்படி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்க அனுமதிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், அதிமுக வைக்கும் பேனருக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை என்பதால் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டனர். அத்துடன் மனுவையும் தள்ளுபடி செய்தனர்

கருத்துகள் இல்லை: